Thursday, January 15, 2009

மனம் ஒரு...!!!


இரக்கம் கொஞ்சம் கூட இல்லாத
இறைச்சிக் கடையின் முன்னால் நான்

ஒன்பதுக்கு மட்டுமேயான கோழிக்கூண்டில்
எண்பதை கூட்டி அடைத்திருக்கிறார்கள்
பட்டினியாகத்தான் இருக்கவேண்டும்
பரிதாபமாய் அத்தனை உயிர்களும்

"உணவேதும் போட்டீர்களா?"

உண்மை அறிய கேட்ட கேள்விக்கு
உதாசீனமாகவே வந்தது பதிலும் கேள்வியாகவே

"விரைவில் சாகப்போகும் அதற்கு
வீணாய் உணவெல்லாம் எதற்கு?"


கூண்டிற்குள் இருந்து
ஒன்றைத் தேர்ந்தெடுத்து
மற்றவையின் கண்முன்னாலேயே
கொடூரமாய்க் கொலைசெய்து
உயிர் போகும் முன்னரே
மயிர் பறித்து தோலுறித்து
........................
........................
தராசிலிருந்து இறக்கி
துண்டுகளாக்கி முடிக்கும் வரை
துடித்துக்கொண்டே இருக்கிறது
தரையில் விழுந்த
இரண்டு இதயங்கள்

"ஒரு உயிரின் கண் முன்னே
மற்றதை கொல்லக்கூடாது
சட்டப்படி குற்றச் செயல் அது
கூடியவரை தவிர்க்கவேண்டும் அதை"


ஓங்கி ஒலித்தது எனது குரல்
ஓரவிழியால் பார்க்கிறான் கடைக்காரன்
என் முகத்திலிருந்து அவன்
எதையோ வித்தியாசமாய் உணர்கிறான்
அவசரமாய் பொட்டலம் கட்டி
அடுத்த நொடி கையில் திணிக்கிறான்

'ஆகா! எடை குறைவாகத் தெரிகிறதே?
அளவில் ஏதும் ஏமாற்றியிருப்பானோ!
ஏதேதோ நினைப்பில் நானும்
எடைகல்லை பார்க்க மறந்து போணேனே!!'

1 comment:

ஆர். இளங்கோவன் said...

அன்பின் துரை
தங்கள் வலையின் இன்றைய சிறப்பு விருந்தினராக...நுழைந்துள்ளேன்... இன்று முழுவதும்..இந்த நந்தவனத்தில்...என் நாடிகள்..எல்லாம்...புதுப்பிக்கப்பட வேண்டி வந்துள்ளேன் தோழனே...

வாரயோ என்றழைத்த உன் குடிலுக்குள்..எதனை இழந்தேன் எதனை எடுத்தேன்.....

அன்புடன் இளங்கோவன்