Thursday, June 10, 2010

தென்றலின் பாதையிலும்.......!



மேலே........
அசையாமல் இருக்கிறது
அகலவிரிந்த ஆலமரம்

கீழே..........
வெயிலின் வெம்மையால்
வெக்கிப்போன நாங்கள்

திடீரென..........
தென்றல்க் காற்று மெதுவாய்த்
தவழ்ந்து வரவே
ஆட ஆரம்பிக்கிறது கிளைகள்;
கூடவே இலைகளும்

வெந்து போயிருந்த கூட்டம்
மகிழ்ந்து வரவேற்கிறது
ஆடும் மரத்தையும்
ஆட்டுவிக்கும் காற்றையும்

கண்கள் நிலைகுத்த
கவனம் நிலைகுலைய
கலவரமாகிறேன் நான் மட்டும் ..........

கொஞ்சம் மேலே......
.
.
.
.
கொஞ்சம் மட்டுமே
ஒட்டிக் கொண்டிருக்கும்
பழுத்த அந்த இலையின்
பரிதவிக்கும் கடைசி நொடியின்
நேரடி சாட்சியாக
பதட்டத்தோடு நான் ..........

(கரு:யாழி)