Wednesday, March 23, 2011

கிராமத்துக்குள்ளே வாரீயளா..........!

அன்பு உள்ளங்களுக்கு ...........

பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........

வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள் , கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா, உறவுகளின் சந்திப்பு என பரபரப்பாய் இருக்கும் நாள் ....

எங்கெங்கோ புலம் பெயர்ந்து கிடப்பவர்களையும் ஓரிடத்தில் நம்பிக்கையின் பெயரில் இணைக்கும் நாள்...

தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ளும் நாள் ..........

(ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள் அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைஐவழி உறவின் முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு பரிமாறிக்கொள்ளும் நாள்...இன்னும் விபரமாக தனி இழையில்:)

போவோமா......வாருங்கள் ...ஒரு கிராமத்து பங்குனி உத்திர விழாவிற்கு
( மு.கு : அலைபேசியில் எடுத்தப் படங்கள்.....தெளிவாய் இல்லாத இடங்களில் ...மன்னிக்கவும் )

1)மலை ஏறுவோம்..........................................................2) சீவலப்பேரி
19032011(001)aa 300.jpg 19032011(053)a.jpg


3) வரவேற்கிறார்..............................................................4)அடுக்கிவைத்தாற்போன்ற பாறைகள்..
19032011(003)a.jpg 19032011(015)a.jpg


5) விடலை......................................................................6) மேலிருந்து ஒரு பார்வை
19032011(004)a.jpg 19032011(007)a.jpg


7)தொட்டிக்குக் கீழே நம்ம ‘boss'......................................8) வேண்டுதல்/ஆசீர்வாதம்/வசூல்
19032011(020)a.jpg 19032011(017)a.jpg


9)முக்கிய செய்தி : குழந்தைவரம் வேண்டி, மலைக்கு மேலே பிச்சை எடுத்துவரும் பணத்தைக் கொண்டு ,அடிவாரத்தில்(பிறர் உதவியின்றி) உணவு தயாரித்து, பிறருக்கு வழங்குவதாக நேர்ந்துகொண்டு மடியேந்தி நிற்கும் தாய் இவர்....
அவரது நிலையையும் அருகில் இருப்போரையும் கவனிக்கும் பொழுது ....பொருளாதாரத்தில் குறை இல்லாதவர்கள் என்று தெரிகிறது....... நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற உறுதியுடன் கண்கலங்கி நின்றவரைத் தாண்டிச்சென்ற ...சாமிகும்பிட்டு இறங்கும் அனைவரும் ஒரு நிமிடம் நின்று ...திரும்பி ஆண்டவன் சனிதானம் நோக்கி வேண்டிவிட்டு ,அவரது மடியில் தனது கையில்ம் இருப்பதை போட்டுச் சென்றதைப் பார்க்கும்பொழுது ...மேற்கொண்டு தொடர்ந்து என்ன எழுதவென்று தெரியவில்லை......ஒவ்வொரு கிராமத்தானிடமும் ’மனித நேயம்’ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ....( நான் கூட நாகரீக வேடத்தில் என்னை மறைத்துக்கொண்ட கிராமத்தானாக என்னை உணர்ந்தேன் அந்த இடத்தில்)

மருத்துவம் செய்யாததை..அவர்கொண்ட நம்பிக்கையும்...அவருக்காக அவரை இதற்குமுன் அறியாதவர்கள் செய்த வேண்டுதல்களும் செய்துமுடிக்கும்.... நாமும் வேண்டிக் கொள்வோம் அன்பர்களே ...........
19032011(027)a.jpg
வரும் வருடத்தில் அவர் குழந்தையுடன் அங்கே வருவார் என்ற நம்பிக்கையுடன்..........


10)மொட்டைக் கிணறு /மொட்டைபோட்டுக் ................11) வெறும் பாறையில் வேர்விட்டு உயிர்வளர்க்கும்
குளிக்கும் கிணறு ..................................................................ஆலமரக்கன்று
19032011(025)a.jpg 19032011(018)a.jpg


12) மேலிருந்து ஒரு கோணம்.........................................13) பாரம்பரிய வழித்தடம்
19032011(023)a.jpg 19032011(028)a.jpg


14) வண்டித் தடம்............................................................15) கீழே இறங்குவோம்
19032011(031)a.jpg 19032011(033)a.jpg

16)வழியணுப்புகிறார்.......................................................17) சந்தையில் வரவேற்கும் ‘எந்திரன்’
19032011(032)a.jpg 19032011(063)a.jpg



19032011(036)a.jpg 19032011(035)a.jpg
18) பூந்தி , கருப்பட்டி முட்டாய்........................................19) கருப்பட்டி முட்டாயும், சீனி முட்டாயும்
................................................................................................(ஏணி முட்டாய் என்றும் வேறுபெயர் உண்டு)


19032011(049)a.jpg 19032011(040)a.jpg
20) வெங்காய வடை........................................................21) இனிப்புச்சேவு,காராச்சேவு, காராப்பூந்தி
..................................................................................................(காரச்சேவு,காரப்பூந்தி தான் உண்மையான பேரு:))




19032011(037)a.jpg 19032011(048)a.jpg

22) கொதிக்கும் எண்ணையில்........................................23)குதித்த முட்டை போண்டா......


19032011(041)a.jpg 19032011(039)a.jpg
24) பருப்புவடை,பஜ்ஜி,முட்டைக்கோசு ........................25) கேக்...அந்த காப்பி டம்ப்ளரைப்பத்தி தனி
...................................................................................................சாகசக் கதை இருக்கிறது ..


19032011(043)a.jpg 19032011(044)a.jpg
26) அடிவாரத்தில் அவசரக்கடை.....................................27) நகைக் கடை


19032011(045)a.jpg 19032011(046)a.jpg
27) பேன்சி ஸ்டோர்..........................................................28) பூக்கடை


19032011(057)a.jpg 19032011(058)a.jpg
29)பாசி,மாலை..................................................................30) கொஞ்சம் பெரிய கடை


19032011(060)a.jpg 19032011(061)a.jpg
31) குளிர்ச்சியாய் வெட்டிவேர் நீரில் நன்னாரி சர்ப்பத், 32) தர்ப்பூசும் , அன்னாச்சியும்
சூடாய் சேமியாப் பாயாசம்


19032011(059)a.jpg 19032011(024)a.jpg
33)கெளம்பியாச்சு..கெளம்பியாச்சு.................................34) கொஞ்சம் கடந்தபின் ..எதையோ தொலைத்தது போல் ................................................................................................உணர்ந்து திரும்பிப் பார்கிறேன்
.................................................................................................தூரத்தில் கலங்கலாய்த் தெரிகிறது எல்லாமும்



30012011(009).jpg
35) முக்கியமான கதையை மறந்துட்டேன் பாருங்க .................

அடிவாரத்தில் வூட்டம்மா மற்ற சாமிகளையும் பார்த்துவரப்போன நேரத்தில்...காப்பி குடிக்கலாமேன்னு ‘ஒரு காப்பிண்ணே’ என்று ஆர்டர் கொடுத்து கொஞ்சம் நெழலப் பார்த்து ஒதுங்கி நின்னேன் ......

போலீசுன்னு நெனைச்சிருப்பாரு போல ....ஸ்பெசல் காப்பி வந்து சேர்ந்தது .......ஒரு 30 வருடங்களாக என்னால் இன்னும் செய்து முடிக்க முடியாத / கண்டு பிடிக்க முடியாத ஒரு மிகப்பெரிய புதிரான சங்கதியாக ..
டபராவில்(கப்பில்) கவிழ்ந்த நிலையில் டம்ப்ளர் ...அதுக்குள்ளே காப்பி ....கையிலே காப்பியை வாங்கியவுடன் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது ......
aqw (164).gifஇங்கே ஒரு ப்ளாஷ்பேக்....... 30 வருடங்களுக்கு முன்...........................
காப்பிக் கடை ...அப்பாவோடு நான்...கையில் இதேபோல ஒருகப் காப்பி.......பார்த்தவுடன் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது....காப்பி இல்லாத வெறும் கப்பைக் கொடுத்து கடைக்காரர் ஏமாற்றுகிறார் நம்மை...
கோபம் கொப்பளிக்க கப்பை கீழே போடுகிறேன்........உள்ளே இருந்து சிதறிச் சிந்துகிறது காப்பி.........
’ அட எங்கே இருந்தது காப்பி’ அதிர்ந்து போய் பார்க்கிறேன் .... சுத்தி இருந்தவங்க எல்லாம் சிரிக்க , வெக்கம் பிடுங்கித் தின்கிறது என்னை.....

அப்பா செல்லமாகத் தலையில் தட்டிவிட்டு.....இன்னும் ஒரு கப் வாங்கி டம்ப்ளரை நிமிர்த்தப் போக நான் ஓடிச் சென்று அவர்கையிலிருந்து காப்பியைப் பிடுங்குகிறேன் .....கேலி செய்தவர்கள் வாயடைக்க வேண்டுமே .....
நாமே திறந்து காட்ட வேண்டும்......

வேகமாக தலைகீழாக இருக்கும் அந்த டம்ப்ளரை நிமிர்த்திய நொடியில் ....கொதித்துக்கொண்டிருந்த காப்பி பொங்கி கப்பிலிருந்து வழிந்து ...கால், தொடை (இன்க்ளூடிங் ஆல்..:) எல்லாம் கொட்டி , வெந்து ...10 நாளைக்கு டவுசர் போடாமல் அலையும் நிலைவரையில் கொண்டுவந்து விட்டுவிட்டது ...:(((


---அந்தப் பயத்தில் இன்றும் இன்னும் ஒருமுறை உடம்பு நடுங்க ........அப்படியே காப்பியை கார்மேல வைத்துவிட்டு ...படம் எடுப்பதுபோல நடித்துக் கொண்டிருந்தேன் (எவ்வளவு நேரம்தான் நானும் படம் புடிக்கிற மாதிரியே படம் போடுறது :((
...வந்து சேர்ந்த வூட்டம்மா அந்த காப்பி டம்ளரையும்,என்னையும் மாத்தி,மாத்தி பாத்தாங்க....விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சவங்க வீடுவந்து சேரும் வரைக்கும் நிறுத்தவே இல்லை..:((,,,வீட்லயும் பிள்ளைங்க கிட்டே சொல்ல்லி ..அவங்களும் கிணடலடிச்சு...பெரிய கலாட்டாவாகி எனது வீரம்,மீசை எல்லாம் அன்னிக்கு ஒருநாள் குடை சாஞ்சுப் போச்சுது ;(


நீதி : ஆர்வக் கோளாரில் எல்லா விசயத்தையும் வூட்ல சொல்லீடாதீங்க :))))


Monday, March 21, 2011

சில சிங்க(X) நாய்கள்................

அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....

(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)

சில நடுநிசி(X) நாய்கள் :

X-Files-01-june[1].gifxfiles.gifX-Files-01-june[1].gif

ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை

நாய்களிடம் எதிர்பார்த்து

தாய்மணணில் பிடியை

தற்காலிகமாய் இழந்து

பொய்யாகிப் போனது போன்ற

மாயத் தோற்றத்தின்பின்

அரங்கேற மறைந்திருக்கிறது

பல்லாயிர ரத்த சரித்திரம்

நாளைய உலகம்

போற்றக் காத்திருக்கும்

நிகழ்கால யுத்த சரித்திரம் ....!


அதீத நம்பிக்கையோடு

வெற்றியை நிர்ணயித்து

தேதியை நிச்சயித்து

சேதியை அறிவித்தும்........

பெரும் கண்டங்கள் துணயோடு

வருங்கால வல்லரசுகள் இணையோடு

வான்வெளியை வளைத்துப் பிடித்தும்

கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....


கைப்பற்ற வேண்டிய இலக்கு

காற்றில்கரைந்ததால் கலங்கி

கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து

அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து

வெளியில் ஆட்டம் போட்டு

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன

இலக்கின் இலக்காகிப்போன

சில சிங்க(X) நாய்கள்................


விலங்கிடமிருந்து காப்பதாய்

உலகுக்குக் காட்டிவிட்டு

அப்பாவிகளைப் பிடித்து

வேலிக்குள் அடைத்து

உலகை ரட்சிக்கும்

பெரியண்னன்கள் ரசித்திருக்க

வெறிகொண்டு வேட்டையாடி

ருசித்துக் களைத்திருக்கின்றன

சிங்கமென்ற நினைப்பில்

காவல் பொறுப்பிலிருக்கும்

சில சிங்க(X) நாய்கள்............


பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்

வரிசையில் ஏங்கி நிற்க .....

‘புளிசாதம் என்றொரு குரல்

சன்னமாய்க் கேட்டு வைக்க....

தலைமுதல் கால்வரை கவசமும்

தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்

முள்வேலியைத் தாண்டி

தலைதெறிக்க பாய்ந்தோடி

பங்கருக்குள் பதுங்குகின்றன

முன்னர் மகி(ழ்)ந்த

சில சிங்க(X) நாய்கள்.......


உறுப்பிழந்தவரையும்

உள்ளம் பேதலித்தவரையும்

முள்வேலிக்குள் நெருக்கமாய்

அடைத்து வைத்திருப்பது

தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......

தன்னுயிர் பற்றிய பயத்தால் என்பதை

உலகறியச் செய்து கொண்டிருப்பதும்

அதே முள்வேலி தான் என்பதை

இன்னும் உணராமல் இருக்கிறார்கள்

சில சிங்க(X) நாய்கள்...............


பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்

பற்றிய பயம் தொற்றிக் கொள்ள

சிதையைச் சிதைத்து

புழுதியில் கலப்பதாய் நினைத்து

எம்தலைக் கிழவியின் சாம்பலை

எம்மண்ணிலேயே விதைத்து

ஏங்கிப் புதைந்திருக்கும்

எம்குல வித்துக்களுக்கு

தம்மையும் அறியாமல்

உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்

சில நடு நிசி நாய்கள்

..........சிங்க(X) நாய்கள்


இப்போதைய எகிப்தும்

துனிசியாவும் லிபியாவும்

உரத்துச் சொல்லும்

நாளைய வரலாறு ஒன்றை

இன்றைய உலகுக்கு..................


பூஜ்ஜியத்துகுள் இருந்து

பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....


Tuesday, March 8, 2011

14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!


ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....

தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்
.....

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!