Saturday, February 26, 2011

13.இந்த நூற்றாண்டின் நிலவரம்...கலவரமாய்..........!

போர்க்களம்.....


தம் கலையைக் காட்ட

தம்மை நிலை நாட்ட

எதிர் எதிர் துருவங்கள்

வெற்றியைக் குறிவைத்து

வெறியுடன் மோதும் ஆடுகளம் ...


அடியார்கள் கூடிவர

பெரியோர்கள் பாடிவர

தேவதைகள் ஆடிவர

அமைதியாய் வருகிறார் கடவுள்


அரக்கர்கள் வெடிவெடிக்க

ஆயுதங்கள் சடசடக்க

அங்கங்கள் துடிதுடிக்க

ஆர்ப்பரித்து நிற்கிறான் சாத்தான்


பாந்தமாய் நடுவர் கொடியசைக்க

பார்ப்போர் மனதுக்குள் இடிஇடிக்க

இந்தப் பூகோளம் ஒடுங்கிநிற்க

அந்தக் பாதாளம் நடுங்கிநிற்க

தொடங்கிய போராட்டம்....


கடுமையான விதிமுறைகளுடன்

கொடுமையான வழிமுறைகளுடன்

வியூகங்களைப் புரிந்துகொண்டும்

சாகசங்களால் முறியடித்தும்

சமயத்தில் சறுக்கிவிழுந்தும்....

முடிவேத் தெரியாமல்

விடைகாண முடியாமல்

விடாமல் தொடர்கிறது..............


ஏற்கனவே ‘எங்கோ’

செய்துகொண்ட ஒப்பந்தப்படி

கடவுள் வெற்றிபெற்றதாக

’வழக்கம் போலவே’

அறிவிக்கப் படுகிறது......


தேவதைகளின் எண்ணிக்கையும்

கூடிக்கொண்டே இருக்கிறது

நடுவரின் அந்தப்புரத்தில் ....!
[கரு : யாழி]

[படம் : இணையம் /யாரையும் குறிப்பிட்டு அல்ல :) ]


Wednesday, February 23, 2011

12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!

அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....

இன்றோடு....

நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்

நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்

அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...

எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...

என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...


எதற்கும் உண்டே எல்லை..

இன்றுடன் கதையை முடித்துவிட்டால்

இனியும் தொடராது இந்தத் தொல்லை...

பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்

பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை


வலதுகால் வைத்து விளக்கேற்றி

எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...

அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா

எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..


ஆம் இல்லை என்பதே

அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்

அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்

என்னை வேகவைக்கும் சாட்டைகள்


சைகையால் உரைப்பாள் சமயத்தில்

கண்சாடையால் உறைப்பாள் - நான்

சல்லி சில்லியாய் உடைவேன்

சுக்கல் சுக்கலாகி மடிவேன்


என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்

பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்

நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்

பக்கத்து மெத்தையையே அடைத்துவிடலாம்


ஒருவேளை இருக்கலாம்

ஏதாவதொரு பழைய மனச்சுமை...

அவளாக இறக்குவாளென

அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்

இன்று தலைக்குமேல் வெள்ளமாகி

பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது


இதோ..

வந்து நிற்கிறாள் அவள்..


திட்டமிட்டபடியே

காலணிகள் இடம்வலமாய் உதற

முன்னால் உள்ளதெல்லாம் சிதற

பாத்திரங்கள் உடைந்து நொறுங்க

பத்திரங்கள் நைந்து பறக்க.......


உருவம்தான் மாறவில்லையே தவிர

மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்


இன்றுதான் அவளது

உலகவாழ்க்கை வரலாற்றிலேயே

முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை

நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்

மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி

வாய்திறந்து பெரும்குரலெடுத்து

‘ஓவென அழ ஆரம்பிக்கிறாள் .


ஆகா...

இதற்குத்தானே காத்திருந்தேன்....


ஓடிச்சென்று கட்டியணைத்து

முதுகை வருடி தலையைத் தடவி

மெல்ல அவள் காதருகில்

செல்லமாய் கிசுகிசுக்கிறேன்

.உனக்கு பாடவும் தெரியுமா..?

முகாரி ராகம் இது ...!


சட்டென அழுகையை நிறுத்தி

சரேலென என்னை விலக்கி

விறுவிறுவென எதையோ தேடி

குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்


எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..

பொங்கும் வெட்கத்துடன்

இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி

அறையெங்கும் எதிரொலிக்க

அருவியாகச் சிரிகிறாள்

அடடா.... இது ஆனந்த பைரவி......!

கரு : மகாபாரதம் / கண்ணன்Monday, February 21, 2011

11.பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!


உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...

இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...


முன்பொருமுறை...

அப்பாவின்மேல் விழுந்ததற்கே

படபடத்து...பதறித்துடித்து

பூசையும் பரிகாரமுமாய்

ஊரையே கூட்டி...

வீட்டையும் இரண்டாக்கி...

தலைகீழாகப் புரட்டித்தான்

போட்டிருக்கிறாள் அம்மா ..


ஓ.....

இது உச்சந்தலை ....

நினைக்கும்பொழுதே உள்ளம்

வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...


சோதிட...எண்கணித...வாஸ்து...

வல்லுனர்களைத் தேடியும்

பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...

நிபுணர்களை நாடியும்

வீதிவீதியாய் படபடப்புடன்

அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்


அவளுக்கு விளங்கச் சொல்லி

துலங்கவைக்கும் வழிதெரியாமல்

பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்

தொலைக்காட்சியின் முன்

விடைக்காகப் பதட்டத்துடன்

நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்


தனியே....

பல்லி விழுந்த

மரப்பாச்சி பொம்மையின்

தலையைத் தடவியபடியே

தேம்பலுடன் விரல்சப்பி

தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...


திருதிருவென விழித்தபடி...

அருகிலேயே இருக்கிறது

அந்த ரப்பர் பல்லியும்.........


Thursday, February 17, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(12) செங்கோண முக்கோணம்..ஒரு உண்மை..!

கற்போம்,கற்பிப்போம் : (12) : செங்கோண முக்கோணம் [எளிய வழியில் முழு எண்களால் ஆன ( பின்னங்கள்/fractions இல்லாத )ெங்கோண முக்கோணம் அமைக்கும் முறை ]

(கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!
--இதன் தொடர்ச்சியாக கிடைத்த இந்த மிக முக்கியமான உண்மையை/சூத்திரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ...மிக ஆர்வமுடன் ஊக்கமளித்து செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் அன்பர்கள்/பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி

செங்கோண முக்கோணம் ::

பக்கங்கள் X,Y : எனவும்

[X = 2ab ; Y = ( a²~b²) = a²,b² இடையிலான வித்தியாசம்.]

கர்ணம் Z: [Z = (a²+b²)] னவும் கொள்வோம்.

(a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்

முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)

(வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)

m 12.jpga b

a

b

பக்கம் X

பக்கம் Y

கர்ணம் Z

(2 x a x b)

(a² ~ b²)

(a² + b²)

1

1

1

2

4

3

5

1

3

6

8

10

1

4

8

15

17

1

5

10

24

26

1

6

12

35

37

1

7

14

48

50

1

8

16

63

65

1

9

18

80

82

1

10

20

99

101

2

1

4

3

5

2

2

2

3

12

5

13

2

4

16

12

20

2

5

20

21

29

2

6

24

32

40

2

7

28

45

53

2

8

32

60

68

2

9

36

77

85

2

10

40

96

104

நன்றி : nahupoliyan N. பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம்