Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Wednesday, May 25, 2011

அழகர் சாமியின் குதிரையும்,எங்கேயும் காதலும்...!



மன்னிக்கவும் ..கொஞ்சம் தாமதனான பதிவுக்காக :

12ம்தேதி காலை...கோவையிலிருந்து ஒரு முக்கிய அழைப்பு...13ம்தேதி ஒரு தொழில்முறை சந்திப்பு...கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும் ....13ல் சாலை நிலவரம் எப்படி இருக்கும் என்றுத் தெரியவில்லை..அதனால் இன்றே செல்ல முடிவு செய்து அவசரமாகக் கிளம்பினேன் ...குழந்தைகளும் சேர்ந்துகொள்ள ..குதூகலமாகக் கிளம்பினோம்...

13..காலை...கோவை: தொலைக்காட்சிமுன் நாங்கள் ஆவலுடன் அமர்ந்திருக்க...உள்ளிருந்து ஆளாளுக்கு அவர்களது நம்பிக்கையைக் கொட்டிக் கொண்டிருக்க... மின்தடை 9-12 வரைக்கும் ........

சரி...இனி கதைக்கு ஆவாது..எல்லாரும் கிளம்பி ...எந்தக் கவலையும் இன்றி ஊர் சுற்றி ...சந்திப்பையும் முடிக்கும் போது ஆட்சி மாறி இருந்தது .......

ஆனால் அதே வழக்கமான...அதே பரபரப்பில் கோவை..எந்த விதமான மாற்றமும் இன்றி ........

வந்தவேலை சீக்கிரமே முடிந்ததால் .....குழந்தைகள் ஏதாவது படம் பார்க்க ஆசைப்பட.....கேஜி காம்ப்லக்சில் நுழைந்தோம் .... 4 அரங்கிலும் வாரிசுகளின் படங்கள் ........எனது முதல் தேர்வு

‘அழகர்சாமியின் குதிரை ‘
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-2.jpg
சிறப்பம்சங்கள் :
1)அச்சு அசலாய் ஒருகிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்...பேருதவியாக ஒளிப்பதிவாளர்...உறுத்தாத இசையமைப்பாளர் ...படம் பார்க்கிறோம் என்ற நினைப்பே வராமல் ..இயல்பாய் நம்மைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் வசன கர்த்தா........

2)பாத்திரமாகவே மாறிப்போன தாநாயகன் அழகர்சாமி , இன்ஸ்பெக்ட்டர், முற்போக்குப் பெரியம்மா

3) மிக முக்கியமாக குதிரைக்காக கதாநாயகன் போடும் சண்டை ... ஓடிப்போய் அவனுக்கு உதவவேண்டும் என்னும் அளவுக்கு இயல்பானது

4) அங்கங்கே வரும் இயல்பான பாத்திரங்கள் ( செவிடாக நடிக்கும் கிழவி, சர்பத்துக்கு காசு கேக்கும் பையனை அடிக்கும் அப்பா, ஊர்ப் பெரிசுகள் ,பரோட்டா சூரி )

5) கலக்கல் நகைச்சுவைக் குத்தல்கள்

6)கதா நாயகன் பெண்பார்க்கும் இடம்..மிக அழகானபெண் என்பதால் வேண்டாம் எனறு மறுக்க...பெண்ணோ மனதுமட்டும் போதுமானது எனச் சம்மதிக்கும் இடம் ....

7)கையைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு தொடும் இடம் ...கவிதை :)

8) குழந்தைத் தோழிலாளர்கள் / கிராமங்களின் பொருளாதார அவல நிலையை காட்டும் இடம்

9) மூட நம்பிக்கையை கிண்டல்செய்யும் தொணி / பாணி

10) மலையக மக்கள் வாழுமிடத்தை/ போக்குவரத்து நிலையை உள்ளதை உள்ளதுபோல காட்டி இருப்பது

சறுக்கல்கள் :
1) அந்த மைனர் ....கிராமத்தின் மேலுள்ள மதிப்பை எல்லாம் மொத்தமாய்ப் போட்டு கொளுத்தும் பாத்திர வடிவமைப்பு ... நகைச்சுவைக்காகத்தான் என்று எடுக்கவே முடியாது .... பொது இடத்தில் எதிரில் உள்ள (திருமணமான) பெண்களை கண்சாடையிலேயே பேசி தனியாக அழைத்துச் சென்று விடுவாராம் ....பெண்களும் அவனுக்கு வழிகாட்டி முன்னே செல்வார்களாம் ....மிகக் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் ...

2) மலையாள மாந்தரீகர் ...இந்தப் பாத்திரம் தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஒன்று .... நம்ம ஊர் ப்ராடாகவே காட்டி இருக்கலாம் . வேறு மொழி பேசுபவர்களை ஏமாற்றுக்க்காரராகக் காட்டுவது இனவேற்றுமையையே வளர்க்கும் ... ( நம்மை அவர்கள் ‘பாண்டி’ என்று சொல்வதை எதிர்க்கும் நடு நிலையாளர்கள் ..இதையும் எதிர்க்க வேண்டும் ... யார் முதலில் நிறுத்துவது என்பதுதான் இப்போதைய கேள்வி... அது நாமாகவே இருப்போமே ).

3) பல இடங்களில் இடறும் லாஜிக் ( அவ்ளோ பெரிய மரக்குதிரையை தனியாளாக ஆசாரி இருமுறை யாருக்கும் தெரியாமல் இரவு மாற்றுவது ....குதிரைக்கு திடீரென வீரம் வருவது ....கடைசியில் குதிரையை கிராமத்து மக்கள் கண்டுகொள்ளாமல் விடுவது ...)

4) அந்த வில்லன்...தெளிவில்லா பாத்திர அமைப்பு ..(ஊர்மக்கள் நடுவி வைத்து குதிரைக்கு விசம் கொடுத்தா மாட்டிக்குவோமுன்னு கூடவாத் தெரியாது?)

5) சாதி எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்க நினைத்து , மூட நம்பிக்கைக்கு சல்யூட் அடித்திருக்கும் க்ளைமாக்ஸ் (திருவிழா முடிந்தவுடன் போலிச் சாமியார் சொன்னது போலவே வரும் மழை)

பொதுவாக : சில குறைகளைத் தவிர்த்து ..பல பரிமாணங்களை சிறப்பாகப் பதிந்துள்ள நல்லதோர் படம்

படம் முடிந்து வெளியே வந்தோம் ........

வாசலில் நண்பர் அடுத்த இரவுக் காட்சிக்கு 6 டிக்கெட்டுகளுடன் சிரித்தபடியே நிற்கிறார் ......:)))

Popcorn-01-june[1].gifpopcorn-02.gifpopcorn-01.gif(அப்போ.....இதுதான் இடைவேளையா ?)


எங்கேயும் காதல்

enkeeyum kathal.jpg

இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்கள் உள்ள படம் மற்றும் ப்ரபுதேவாவின் நடனம் என்ற குறைந்த பட்ச உத்திரவாதத்துடன் உள்ளே நுழைந்தோம்..

ப்ரான்ஸ்-ல் ப்ரபுதேவா..... காதல் பற்றிய ஒர் அற்புத அறிமுகத்துடன் படத்தைப் பாடலுடன் வித்தியாசமாய் ஆரம்பிக்க...ஆகாவென்று நானும் இருக்கையில் நன்றாக நிமிர்ந்து உக்கார... எழுத்துப் போட ஆரம்பித்த உடனேயே இடி இறங்க ஆரம்பித்தது தலைக்குள்...

..ப்ரான்ஸில் காதலென்றால் ‘உதட்டோடு உதடு' முத்தம் கொடுப்பது மட்டும்தான்...அதுவும் தொடர்ந்து மணிக்கணக்கில் நாள்கணக்கில்...பார்க்கில், பாதையில், பஸ்ஸில், பைக்கில், சாலையில் , கைகோர்த்துப் போகும்போது...இவ்வளவு ஏன்????...ஆய் போகும்போதுகூட விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம் அங்கே .......

(இந்தப் படம் அங்கே வெளியாகாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.....அவர்களை இந்த அளவுக்குக் கேவலப் படுத்தியதற்காக நம்மேல் போர்த்தொடுத்தாலும் ஆச்சரியமில்லை )

தீராத விளையாட்டுப்பிள்ளை நம் கதா நாயகன் ...தினம் ஒரு பெண் வேண்டும் அவர்க்கு...ஆனால் காதல் என்றால் மட்டும் காத தூரம் ஓடுவாராம் ....கதா நாயகியை மட்டும் சீண்ட மாட்டாராம்...

வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பண்பாட்டின் சிகரம் நம் கதாநாயகி ...... நாயகன் அவளைத் தினமும் தவிர்த்து அவள் கண் முன்னாலேயே வேறு வேறு பெண்களை படுக்கைக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் .....அவனைத்தான் காதலிப்பாளாம்........அரைவேக்காடு,லூசு, மொக்கை...எல்லாம் தாண்டி அதற்கும் மேலான விசித்திரப் பாத்திரப் படைப்பு..


நிற்க : ஒரு உண்மையை நம்பித்தான் ஆக வேண்டும் . இந்தப்படமும் மன்மதன் அம்பும் ஒட்டி உருவான இரட்டைக் குழந்தைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒன்று முந்திப் பிறந்து விட்டது ...

எ.கா: ம.அம்புவில் கமலின் அறிமுகக் காட்சி....அந்தத் துரத்தல்...சண்டை ..எல்லாம் அப்படியே காட்சி / ப்ரேம் மாறாமல் ...இதிலும் இருக்கிறது ..கமலுக்குப் பதிலாக ரவி ..:)

காமெடி என்ற பெயரில் கேஸ் ட்ரபுளை மையமாக வைத்துக் கேவலமான/ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் ...... இன்னும் தீராத அவரது கலைத்தாகம் அடுத்த படத்திலும் தொடர வாழ்த்துகள்.

ஒரு கட்டத்தில் என்னைப் பார்க்க ...எனக்கே பாவமாய்ப் போக ..ஆண்டவன் இருக்கிறான் என்பதை உறுதி செய்யும் விதமாக வந்தது இடைவேளை ....

ஒரு 10 நிமிடப் பெயிலுக்குப் பின் மீண்டும் ஜெயில் ஆரம்பம் ...

(எனக்கு)

சாலையில் கதாநாயகி சேலையில் அழகாக வந்து நிறக....அங்குள்ள வெளி நாட்டு இளைஞர்கள் ...ஓடிவந்து ‘வாவ்சொல்ல , கதா நாயகன் அவர்களிடம் ‘இவள் தமிழ்ப் பொண்ணுஎன்று தமிழில் அறிமுகப் படுத்த...

அதைப் புரிந்து கொண்டு அவர்கள் ”ஓ..5 மினிட்ஸ் ப்ளீஸ் என்று அவகாசம் கேட்டுவிட்டு

‘அரைமணி நேரத்தில் தமிழ் கற்கலாம்என்னும் புத்தகத்தோடு திரும்பிவர..ஆரம்பமாகிறது ஒரு அதகலப் பாடல்

மங்காய்..... நிலாவின் தங்காய்

வெளி நாட்டு நாக்குகளின் உச்சரிப்பில் அழகுத் தமிழில் பாடல்..வலுக்கட்டாயமாய் ஆங்கிலப்பாடல்களைச் சொருகும் சூழலில்...இப்படி ஒரு அருமையான சிச்சுவேசன்...அதுவும் மிகப் புதுமையாக.....சேர்ந்த சோர்வெல்லாம் கலைந்து மீண்டும் நிமிர்ந்து உட்க்கார்ந்தேன்....அருமையான நடனம் ...பாதிப்பாட்டில் எல்லாம் கெட்டு ஒழிந்து குட்டிச் சுவராகி விட்டதுL

அந்த லூசுக் கதாநாயகி இங்கேயும் நடுரோட்டில் நின்னுக்கிட்டே கனவுகான ...அந்த வாலிபர்களை ஒதுக்கிவிட்டு...கதா நாயகன் வந்து ஆட ஆரம்பித்துவிட்டான் ...சே.....இந்த எழவைத்தான் ஏற்கனவே பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் .......

என்னடா இது???? எப்படா முடியும் ??? என எனக்குள்ளேயே ஏங்க ஆரம்பித்தேன் ...( அட ..இப்படி ஏங்கித்தான் எவ்ளோ நாளாச்சுது !)

ஒரு காட்சி...கதாநாயகன் சோகத்தில் பேப்பரை / சோபாவைக் கிழித்து வீசும் காட்சி....அட..சொல்லவே இல்லையே விளம்பரத்தில் கூட !!!....ஆச்சரியமாக படத்தில் இந்த ஒருகாட்சி மட்டும் 3Dல் வைத்திருக்கிறாரா இயக்குனர் ?? என வியந்த என் எண்ணத்தில் உடனே மண்/குப்பை/பஞ்சு எல்லாம் விழுந்தது ....எனக்கு முந்தைய வரிசையிலிருந்து ஒரு மிதவாதி எதையோ (எதையோ என்ன எதையோ...சீட்டைத்தான்) கிழித்தி

வீசிக்கொண்டிருந்தார் .....அவரை ஆமோதித்து ஆதரவாகக் கைதட்டல்கள் ...

உள்ளே வந்ததிலிருந்து முதல் முறையாய் ஒரு சின்ன சந்தோசம் எனக்குள் துளிர்ந்தது

அட.. நாம மைனாரிட்டி இல்ல ..மெஜாரிட்டித்தான்... !

திடீரென எல்லாரும் எழுந்து நிற்கும் போதுதான் கவனித்தேன்...

படம் முடிந்துவிட்டதாம் ....கடவுளுக்கு நன்றி

(ஒரு நல்ல சுற்றுலா .... இப்படியாக முடிந்து போனது L

ஒரு முக்கிய வேண்டுகோள் :

திருட்டு விசிடி/டிவிடியில் படம் பார்க்காதீர்கள் !


இந்தப்படத்தை......திருட்டு விசிடி/டிவிடியில் கூடப் பார்க்காதீர்கள் !!

முடிவாக :

வீடு வந்து , திட்டு வாங்கிக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்த வேளையில்...ஆட்சி மாற்றத்திற்கு இடையே நடந்த ஒரு பயணம் முடிந்து போனது ......


வழக்கம்போலவே இப்பொழுதும் ...கண்விழித்து...பல்துலக்கி...காபி குடித்து ..வேலைக்குக் கிளம்பி.....

Sunday, July 25, 2010

தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி .......


தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி

சங்கரின் பார்முலாவில் வந்த தெலுங்கு ‘கிக்’ ஒன்றை ’தில்லாலங்கடி’யாக்கி இங்கே தில்லா சொல்லி அடிச்சிருக்காங்க .
வெற்றியை.

தனது இலக்கினைப் பற்றிய தேடலில் இருக்கும் ஒரு இளைஞனின் (வழ்க்கமான) கதை தான். அதைத்தான் அதக்களமாகச் சொல்லி இருக்கிறார்கள் . லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஜாலியாக 3 மணி நேரத்தை எஞ்சாய் பண்ண நினைப்பவர்களுக்கு சரியான படம் இது ...

’இவ்வளவு ஜாலியான ஒருவன் காதலனாய்க் கிடைத்தால் ...
இப்படி ஒரு லூசுப் பொண்ணு காதலியாக கிடைத்தால்...
இந்தமாதிரி ஒரு அப்பா,அம்மா நமக்குக் கிடைத்திருந்தால்...........
இப்படி ஒருவேலை(க்ளைமாக்ஸ்) நமக்குக் கிடைத்தால்........’

இப்படி சில ஏக்கங்களை படம் முடிந்து வெளியே வருபர்களிடையே விதைத்திருப்பது இயக்குனரின் வெற்றி

தியேட்டருக்கு வெளியே வயிற்றுவலி மாத்திரையின் விற்பனையைக் கூட்டி இருப்பது திரைக் கலைஞர்களின் வெற்றி

ஒரேபாடலில் நாயகனும் நாயகியும் 15க்கும் மேற்பட்ட பாத்திரங்களாகக் கலந்து வருவது , மலேசியாவை ’நம்ம ஊரு’ போலக் காட்டுவது ஒளிப்பதிவாளரின் வெற்றி

ஒரு (பெண்)அரசியல்வாதியிடம் பண உதவி கேட்க , எதிரியான உனக்குத் தரமாட்டேன்,உன்னை என்காலில் விழவைக்க எவ்வளவு ஆனாலும் செல்வு செய்வேன் என அவர் கூற, தடாலென அவர்காலில் விழுந்து நாயகன் பணத்தைப் பெற்றுச் செல்ல , அரசியல்வாதி குழம்பி ‘இப்போ இங்கே செயிச்சது யாரு?’ என்று புலம்ப , அந்தக் கேள்வி அரங்கில் பார்வையாளர்களயும் தொற்றிக் கொள்கிறது . இது வசனகர்த்தாவுக்குக் கிடைத்த வெற்றி

பாடல்கள் வரும் நேரத்தில் கடைகளில் வியாபாரம் சூடு பிடிப்பது இசையமைபாளரின் வெற்றி


’ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் ’ / ’நாலுபேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பு இல்ல’ என்பதை இன்று

– ’முடியாதக் குழந்தைகளுக்குச் செய்யும்போது அவங்க முகத்துல தெரியுதே ஒரு சிரிப்பு , அதுலதான் இருக்கு ’கிக்’கு. அதுக்காக என்னவேணா செய்யலாம்’’
என்று லேசாக மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்

இது சொல்லவந்த செய்தி 1

அவ்வளவுதான் ., இதுதான் கதையும். அப்படியே கதையோட ஓட்டத்தில் போகுறபோக்குல ஒரு செய்தி வரும் பாருங்க

”தலைக்கனத்தைத் தரும் வெற்றியைவிட
ஜெயிக்கணும்ங்கிற வெறியைத் தரும் தோல்வியிலயும் ஒரு ‘கிக்’ இருக்கு ”

இதுதான் செய்தி 2 , மிக முக்கியமானதும் கூட ..

இதுமட்டும் புரிந்துவிட்டால் தோல்வியில் துவண்டு போவோர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இதைவிட வேறு மருந்து இருக்க முடியாது

இந்த இரண்டு செய்திகளும் குறைந்தது இரண்டுபேரின் மனதுக்குள் பதிந்துவிட்டாலும் இந்தப்படத்திற்கு மாபெரும் வெற்றிதான் . ஏற்கனவே 50% வெற்றிப்படமாகிவிட்டது ( 1 ஆளுக்குள் (எனக்குள்) பதிந்துவிட்டதே :-)

வாழ்த்துகள் ...
.

Monday, September 21, 2009

உன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..!


மகாபாரதம் :

துரியோதனன் கண்ணனிடம்
”துரோகம் இழைத்துவிட்டாய் கண்ணா
அவதாரமாய் இருந்தும்,
தர்மம் மீறி போர்க்களத்தில் நடந்து கொண்டாய் ,
வதந்தி பரப்பிக் குழப்பம் விழைவித்தாய் ,
கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தினாய் ,
அர்ச்சுனனுக்கு சாரதியாய் வந்து மாயம் செய்தாய் ,

அதர்மமாய் நடந்து கொண்டாய் கண்ணா
அதர்மம் விளைவித்துவிட்டாய் ! “

கண்ணின் பதில்
“அதர்மம் செய்பவர் , எதிரேயிருப்பவரிடம் தர்மம் எதிர்பார்ப்பது முறையில்லை !

அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கலாம் , தப்பில்லை !! ”

--இதுதான் படத்தின் செய்தி


அடர்ந்த கானகம் :
வேட்டைக்களம் .
உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்திருக்கிறது சிறுத்தை .
புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் பொறுமையாய் ,
குட்டிகளுக்கு வேட்டையாட தளம் அமைத்துக்கொடுத்து விட்டு
நடப்பவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது பெருமையாய் !

-- இதுதான் (உலக) நாயகன்


ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தும் சின்னச் சின்ன செய்திகள் :
(படத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் , நாம் தெரிந்துகொள்வதற்காக ....)

[படத்தில் வந்த வரிசையில்]

#)மனைவியால் தாக்கப்படும் (சிறுபான்மை) கணவன்மார்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியக் கேள்விகுறி?
#) கன்ஸ்யூமர் சட்டங்களின் உண்மை நிலை பற்றிய சந்தேகம் ! ( குக்கர் )
#) இடதுகைப் பழக்கமிருந்தாலும் அடுத்தவருடன் புழங்கும்போது வலதுகையை உபயோகப்படுத்த வேண்டும் ( பேனாவைத் திருப்பிக் கொடுக்கும் போது )
#) அரசாங்க அலுவலகக் கட்டிடங்களின் நிலமை ( பாத்ரூமில் தண்ணி வராது )
#) லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ! கவனம் !!
#) இடமாற்றம் போன்ற இடர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கும் இளைய சமுதாயம் ( காவல்துறையிலும் )வந்துகொண்டிருக்கிறது ! ( ஆரிப்)
#) விஞ்ஞான முன்னேற்றத்தை வரவேற்க வேண்டும் ( பேக்ஸ் வேண்டாம் , ஈ-மெய்ல் அனுப்பு)
#) பதட்டம் / அலட்சியம் குறைக்க வேண்டும் ( ஆரிப் - 20 மாடிகள் தேடி ஏறியவர், மொட்டை மாடிதானே எனக் கவனிக்காமல் விடுவது )
#)அரசியலின் உண்மை முகம் ( தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வராதே )
#) புகழுக்காக செயல்படும் ஊடகங்களின் நிலை ( எது நிகழ்ந்தாலும் நேரடி ஒளிபரப்பு )
#) அரசியல் கனவில் உள்ள நட்சத்திரங்கள் ( ’தளபதி’ ஸ்ரீமான் )
#) பெண்களுக்கான முக்கியத்துவம் ( சக்தி வாய்ந்த ஹோம் செக்ரட்டரி , விஜெவுக்கு காவலதிகாரி சிகரெட் பற்ற வைக்கும் இடம் )
#) பலியாடுகளாக்கப்படும் உயரதிகாரிகளின் மனநிலை ( மோகன் லால் )
#) ஐடி இளைஞர்களின் தெளிவான பிம்பம் ( தொலைபேசியில் ‘கேர்ள் ப்ரண்ட்’ ,/ உண்மையான இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் , [ நிகழ்வது நியாயத்திற்குத்தான் எனத் தெரிந்தபின் ] கண்டுபிடிக்கவில்லை என மறுப்பது )
#) மதத்தின் புனிதத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் தீவிரவாதிகள்
#) உடனடி நீதியை எதிர்பார்த்து ,( தாமதமான நீதியைத் தவிர்க்க ) நமது சட்ட அமைப்பின் முன்னால் எழுப்பப் பட்டிருக்கும் கேள்வி !


--இது(வும்)தான் படம்


பி.கு : 20 மாடிகளுக்கும் மேலான கட்டிடத்தின் , கைப்பிடிச் சுவறில்லாத மொட்டைமாடியின் விளிம்பில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டே நாயகன் நிற்பது (பயமாக இருந்தாலும் (இருக்கும்)வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ) ஒரு மிகப்பெரிய சாதனை

உயரத்திலிருந்து உலகினை (பறவைப் பார்வையில்) உள்ளபடி காட்டிய தொழில் நுட்ப்பக் கலைஞர்கள் , படைப்பாளிகள் அனைவருக்கும் வெற்றிப் பயணம் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்


காட்சிக்குக் காட்சி ரசிங்க
திரையரங்குக்குப் போய் ருசிங்க

தவறு நடக்கும்போதே தட்டிக் கேளுங்க
தீவிரவாதத்தை வேரிலேயே வெட்டிக் கொளுத்துங்க

வாழ்க பாரதம் !


.