எனக்கும் அந்த
இடைக்கும் நடுவில்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்
தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அமைதியாய் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்
அமைதியாய்ப் பக்கம் வந்து
அரைநொடி சுழற்றி அடித்து
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று
அதிரடியாய் அத்தனையும் விலகி
அங்கங்கே அங்கம் தெரிய
மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட
மிஞ்சிய பாகத்தில்
மிச்சமுள்ள மச்சங்கள் மின்னிட
திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க
அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து
நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க
துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த
மேகம்......
.
3 comments:
மிகவும் புதுமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன் .
ஐயோ.. கலக்கல் கவிதை!
நான் மிகவும் ரசித்துப் படித்தேன்!
நன்றி.. :)
BTW, Title of the Poem is also Super :)
Post a Comment