
ஊதிய உடல் ஒன்று.......
தண்ணீரில்லாத அந்தக்
கிணற்றைச் சுற்றிலும்
கண்ணீர் தேங்கிய கண்கள் ...
மிகக் கனத்த
கவலை தோய்ந்த கணம் அது....
எல்லாம் முடிந்து
எங்கோ.....
’அது’ எரியூட்டி
கரைக்கப் பட்டபின்பும்
இங்கே......
வெறுமையால் நிறைந்த
அந்தப் பாழும் கிணற்றின்
கைப்பிடி சுவரையும் தாண்டி
’கவனிப்பாரில்லாக் கவலையுடன்’
பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........
‘அதோடு’
சேர்ந்து விழுந்த
கரைசேராத சோகங்களும்..
விடைகிடைக்காத கேள்விகளும்...
கொஞ்சம் கவனியுங்கள்....
உங்களின் காலடியிலும்
கசிந்து கொண்டிருக்கலாம்
இதுபோல
ஏதாவது ’ஒன்று’ ......
1 comment:
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/1.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment