எதிரே...
கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்
கல்லும் முள்ளுமாய்
தள்ளிவிடத் தயாராய்ப் பாதை
நாற்புறமும்
கூர்மிகு முட்களுடன்
குத்திக் கிழிக்கக் காத்திருக்கிறது
அடர்ந்த காத்தாடி முள்க்காடு
காலுக்குச் செருப்பிருந்தும்
மேலுக்குப் போர்வையிருந்தும்
தொடர இயலாமல்
மேலும் முயலாமல்
திகைத்து நிற்கிறேன்
நான்
அரவமற்ற அந்தப் பொழுதில்
என்னைத் தாண்டி தன்
பழையசட்டையைக் கழட்டிவிட்டு
பளபளக்கும் புதுத்தோலுடன்
தயங்காமல் நிதானமாய்
காடுகடக்க நுழைகிறது
அரவம் ஒன்று
.
3 comments:
/// காடுகடக்க நுழைகிறது
அரவம் ஒன்று ///
super...
வாழ்க்கை பாதையில் தான் எத்தனை கரடு முரடுகள். இவை எல்லாம் தாண்டிதான்... வாழ வேண்டி இருக்கிறது. வாழ்வு யார் பக்கம் அது வல்லவர் பக்கம்.
அழகாக இருக்கிறது...
நல்ல கவிதை...
Post a Comment