
யாருமே எழுதாத கவிதை
எவருமே எடுக்காத புகைப்படம்
மண்ணில் வந்துவிழும்
மழையின் முதல் துளி
கடலின் கால்நனைக்கும்
கதிரவனின் முதல் ஒளி
மொட்டு மலராக
இதழ் திறக்கும் நேரம்
கானகக் கருங்குயில்
கானத்தின் ராகம்
வெள்ளை மேகம் ஒன்றுசேர்ந்து
இருட்டாகும் ரகசியம்
இருட்டிலிருந்து வெளிச்சமாய் மின்னல்
வெளியாகும் அதிசயம்
காற்றிலிருந்து காலைப் பனித்துளி
உருவாகும் தருணம்
தொட்டுத் தடவிச் செல்லும்
தென்றலின் உருவம்
என்னவளின் கருவில்
எட்டுமாத உருவிலிருக்கும்
எங்கள் இருவரின் ஓருயிர்
எப்படி இருக்கும் ?
ஏங்கிப்போய் இருக்கிறேன் !
யாருக்காவது தெரியுமா ?
3 comments:
கவிதைகள் அனைத்தும் இனிமையாக் இருந்தது...மிகவும் ரசித்தேன்
arumai arumai
உங்கள் உள்ளக் கிடக்கில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் உயிர்த்தெழும் உவமைகள்.. அருமை தோழரே! என் கவிதைக் கண்களையும் கசியச் செய்தது கவிதையின் முடிவு!
Post a Comment