
கடும் கோபத்தில்
கட்டுக்கடங்கா தேனீக்கள்
கூட்டமாய் என்னை நோக்கி....
நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........
நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....
ஆனாலும்
நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....
அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்
வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......
ஊட்டும் தேனைக் கொடுக்கும்
என்றாலும் அதற்கு....
கொட்டும் விசக் கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு
தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை
கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்
அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்
எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....
.
4 comments:
ரொம்ப நல்லாருக்கு.
***நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........ ** என்று சஸ்பென்சாய் ஆரம்பித்து....
திரில்லுடன் காத்திருந்தால்....
கிளிமாக்ஸ்சின் முடிவில்.....
*****எனது தலைக்கு மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள் பூக்கத் தொடங்கி இருந்தது .....******** என்று கவுதிட்டேங்களே.... கவுதிட்டேங்களே....
சுப்பரப்பூ....
நட்புடன்
காஞ்சி முரளி........
கவிதை நல்லா இருக்கு துரை .நான் ஏதோ நேத்து நடந்த மாயாவதி கூட்டத்தை பத்தி தான் கவிதை எழுதியிருக்கீங்களோன்னு யோசிச்சேன்
இதில் எனக்கு இலங்கையின் வரலாறுதான் தெரிகிறது.............உண்மையா?
Post a Comment