இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!
இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத
மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை
இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்
இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..
அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....
சேர்ந்தே
உருவாக்குவோம்.....
தாய்மண்ணே வணக்கம் !
( நன்றி :படம் :இணையம் )
1 comment:
//புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....//
உங்கள் கவிதை மெய்ப்படட்டும்!
வானம் வசப்படும்! :-)
வந்தே மாதரம்!
Post a Comment