
காதலர் தினம்....
காதலின் உண்மை கனம் அறிய
கடவுள் நான் களத்தில் இறங்குகிறேன்
தேர்ந்து எடுத்திருக்கிறேன் அவர்களை
தேரியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
நெடுநாள் காதலர்கள் போலும்
நெருக்கமாய் அமர்ந்து இருந்தாலும்
இடைவெளி அதிகமாகவே தெரிகிறது
இடையே அனல் காற்று வீசுகிறது
கடுமையாய் மோதிக் கொள்கிறார்கள்
கடுஞ்சொல் பறிமாறிக் கொள்கிறார்கள்
திசைக்கு ஒருவராய் திரும்பி
தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்
இரவு முழுவதும் கவலையில்
இருவரும் ஒருநொடி தூங்கவில்லை
மனதில் தோன்றியதை டைரியில்
மொத்தமாய்க் வடித்து வைக்கிறார்கள்
அடுத்தவர் டைரியைப் படிப்பது
ஆண்டவனே ஆனாலும் குற்றம் தான் !
ஆனாலும் என்னதான் எழுதி இருப்பார்கள்
அறிந்து தானே ஆகவேண்டும் !!
அவளின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!
அதற்காக இப்படியா நடந்து கொள்வது!
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தானே அவர்களுக்கு!
அமைதியாய் இருந்துவிட்டால்
அடங்கிப் போய்விடுவோம் என்ற
திடமான எண்ணம் தானே அவர்களுக்கு!
இருந்தாலும் கொஞ்சம் நாமும்
அமைதி காத்து இருந்திருக்கலாமோ?
அவனும் காயம் அடைதிருப்பானோ?
தொங்கிப்போன அவன் முகம்
இங்கே கண் முன்னால் விரிகிறதே
இரவெல்லாம் கவலையாய் இருப்பான்
இதைப் பற்றியே நினைத்திருப்பான்
இன்றய பொழுது முடியட்டும்
இனிமையாய் காலை விடியட்டும்
நாளை அவனை சமாதனம் செய்வோம்
நாள் முழுவதும் சந்தோசமாய் இருப்போம்
அவனின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!
அதற்காக இப்படியா நடந்து கொள்வது?
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தான் அவர்களுக்கு!
தவறான முடிவுகள் கொடுத்தால்
தடுமாறி விடுவோம் என்ற
தன்னம்பிக்கை தான் அவர்களுக்கு!
சச்சினை சாய்த்துவிட்டால்
சமாளிக்க மாட்டோம் என்ற
சிறுமதி தானே அவர்களுக்கு!
சோதனைகளை எல்லாம் ஓரமாய்
சாத்தி வைத்து விட்டு
சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம் !!
எனது டைரிக் குறிப்பு:
???????????????????????????????
2 comments:
TEST
இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறுகிறது.இந்தியா 4-0 என்ற நிலையில் முன்னிலை.இதில் சச்சின்_க்கு 3 முறை சர்ச்சைக்குறிய முறையில் out கொடுக்கப்பட்டது .இதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த டைரிக் குறிப்பு
Post a Comment