Saturday, March 20, 2010

என்னை சோதிக்க எனக்கு உதவுங்கள் .....



அன்பு உள்ளங்களுக்கு,
உங்களின் ஆசியுடன் , கிடைத்த ஊக்கத்துடன் திருக்குறளுக்கு
விளக்கவுரையாக எளிய வெண்பாவில் 1330+ புதிய குறள்கள் அமைத்திருக்கிறேன் .
அதில் உள்ள குறைகளைக் களையவேண்டும் .
அதற்கு தங்களின் உதவி தேவை .

ஏதாவது ஒருகுறளுக்கு விளக்கம் கேளுங்கள் .
நான் தரும் விளக்கக் குறள் பொருந்திவருகிறதா எளிமையாக இருக்கிறதா என சரிபார்த்து , என்னை திருத்துங்கள் .

ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்

முடிந்த அளவுக்கு விளக்கம்தரவும் முயல்வேன்

காத்திருக்கிறேன் உங்களின் கணைகளுக்காக :)

6 comments:

தோழி said...

நல்லா இருக்குங்க...

தோழி said...

"என் நெஞ்சில் பதிந்த உன்னிருவரிகள் - அவை
மனதை உழ வரும் ஏர்கள்".

"நல்லோர் இதயமெங்கும் நீ வாழ்க - அங்கு
தோழா உனது பெயர் ஆழ்க".

உமா said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப[து] இழுக்கு.

இக் குறளுக்கான தங்கள் வெண்பாவைத் தாருங்கள்.
இக்குறள் எளிமையாய் விளக்கம் எல்லோருக்கும் தெரிந்ததாய் இருப்பினும் அதை வெண்பாவில் தரும் போது அதன் எளிமைக் குன்றாமல் தேவையற்ற சொற்கள் இல்லாமல் கொடுத்தீர்கள் என்றால் நன்றாக அமையும். தங்களைத் திருத்தும் அளவிற்கு என் சிற்றறிவு இடங்கொடுக்காதென்றாலும் கருத்துச் சொல்லும் ஆவலில்
உமா.

duraian said...

தோழிக்கு இந்தத் தோழனின் நன்றிகள் :)

duraian said...

அன்புச் சகோதரி உமா அவர்களுக்கு

சிந்தித்தப் பின்செயலில் முன்னேசெல்; சென்றபின்
சிந்தனை செய்வ(து) இழுக்கு

சரியாக வந்திருக்காப் பாருங்க

உமா said...

அருமை அருமை வாழ்த்துக்கள்.