இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, January 26, 2011
கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(7) 5ல் முடியும் எண்களின் வர்க்கம் (ஸ்குயர்) ..ஒரு நொடியில் கண்டுபிடி...!
Tuesday, January 25, 2011
கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(6) மரத்தின் / உருளையின் விட்டம் கண்டுபிடி..!
“வளையதைக் கிளையதாகி,
- வளையதை:-முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும்.
- வளையதைக் கிளையதாக்கி:- அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும்.
- கிளையதை எட்டதாக்கி:-அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
- எட்டில் மூன்றைத் தள்ளி:-அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்.
- நின்றது நெற்றிக் கனம்:- 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.
| ||
Sunday, January 23, 2011
கற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவோம்(ர்,ற்/ன்,ண்/ல்,ள்,ழ்)..!

3) அரிய, அறிய :
அரிய: – அருமையான / அபூர்வமான / வித்தியாசமான
தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்
-அதனால்சின்ன ’ர’ போடுங்க
அறிய: – தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறையவே உண்டு
--அதனால் பெரிய ’ற’ போடுங்க
ன்,ண் :
ன் – பெரிய ’ற’வுக்கு முன்னாடி சின்ன ’ன’வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]
ண் – ’ட’வுக்கு முன்னாடி பெரிய ’ண’ வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]
ல்,ள்,ழ்:
ருல் என முடியும் சொல் தமிழில் கிடையாது . ( ருகரத்தைத் தொடர்ந்து லகரம் வராது .) எனவே ரு வைத் தொடர்ந்து ல் வராது ...
Saturday, January 22, 2011
கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!
அனைவருக்கும் தெரிந்த ஒரு கணித சூத்திரத்தை(ஃபார்முலா) உங்கள்முன் கொடுக்க அனுமதி தாருங்கள்
- பித்தகோரஸ் தேற்றம் / எல்லாருக்கும் தெரிந்ததுதான் ...ஆனாலும் ஒரு சிறு அறிமுகம்
’ ஒரு செங்கோண் முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும் ’.
இதற்கான விடையை கையில் கணிப்பொறி இன்றி கணக்கிடுவது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் மிகக் கடினமான செயலாகும்
ஆனால் இதனை மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை, மிக மிக எளிய வடிவில் தமிழனிடம் அதற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இருந்திருக்கிறது.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சூத்திரத்தின் முன்னோடியாக இது இருந்திருக்கலாம் .அன்றைய நடைமுறை(ப்ராக்டிக்கல்)யில் தூரங்களை 99% துல்லியமாகக் கணிக்கும் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்
எவ்வளவு எளிமை , மனதுக்குள் கணக்கிட்டே கண்டுவிடலாமே விடையை .( பிண்னங்களில் மாற்றம் இருக்கும் )
பொறியியல்துறையில் மிகமுக்கியமான பாடம் இது...ஆனாலும
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்...........
பயன்படுத்தாமலேயே !!!!
அன்பானவர்களே.... ஒருவருக்காவது இந்த சொல்லிக் கொடுப்போம்.
மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மையை உலகறியச் செய்வோம் !
--( நன்றி : இணையத் தமிழ் வலைப்பதிவுகள்....)
என்றும் அன்புடன் -- துரை --
Friday, January 21, 2011
கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(4) வேடிக்கை/ மனதுக்குள் என்ன..?!
- ஈரிலக்க எண் (2 டிஜிட்) ஒன்றை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் (எ.கா. 10)
- அதை இரட்டிப்பாக்கச் சொல்லுங்கள் ( 10 x 2 = 20)
- நீங்கள் ஏதாவது ஒரு இரட்டைப்படை ( ஈவன் நம்பர்) எண்ணைக் கொடுத்து கூட்டிக் கொள்ளச் சொல்லுங்கள் [இங்கே எடுத்துக் காட்டாக 18ஐ கொடிப்போம் ( 20 + 18 = 38) ]
- விடையை பாதியாக்கச் சொல்லுங்கள் ( 38 / 2 = 19 )
- அவர்கள் முதலில் நினைத்த எண்ணை இதிலிருந்து கழிக்கச் சொல்லுங்கள் ( 19 - 10 = 9 )
- இப்பொழுது அவர்களிடம் மீதமிருப்பது 9 எனச் சொல்லி அவர்களை அதிர்ச்சி/ஆச்சரியத்தில் ஆழத்துங்கள்
Thursday, January 20, 2011
கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(3) அதிசய விடை....
Wednesday, January 19, 2011
முப்பாலுடன் முதல்காலை..........(3)
அறம் / அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. [04:04]
விளக்கக் குறள் :
அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்
பகட்டும் புரட்டுமா கும்
பொருள் / அதிகாரம் 042 :கேள்வி [கேட்டறிதல்]
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
விளக்கக் குறள் :
கேள்வி உணவுண்ணும் சான்றோர்கள்; வேள்வி
உணவுண்ணும் வானவர்க்கும் ஒப்பு
இன்பம் / அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. [112:07]
விளக்கக் குறள் :
குறையுண்டோ மாதர் முகத்தில்; வளர்ந்து
நிறையும் முழுமதி போல்
என்றும் அன்புடன் -- துரை --
Tuesday, January 18, 2011
முப்பாலுடன் முதல்காலை..........(2)
அறம் /
அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கக் குறள் :
துறவென்னும் ஞாலத்து வித்து
பொருள் /
அதிகாரம் 041 : கல்லாமை
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
விளக்கக் குறள் :
கண்கவர் தோற்றமும் குன்றிய நுண்ணறிவும்
என்றென்றும் மண்பொம்மை போன்று
இன்பம் /
அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
விளக்கக் குறள் :
தழுவும் பொழுதெல்லாம் புத்துயிர் தந்திடும்;
அமுதத்தால் ஆனதவள் தோள்
என்றும் அன்புடன் -- துரை --
Monday, January 17, 2011
முப்பாலுடன் முதல்காலை..........(1)
திருவள்ளுவர் தினம் :அறம் / அதிகாரம் : 2 வான்மழை:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
விளக்கக் குறள் :
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
விளக்கக் குறள் :
மகிழப் பழகுதல்; நெஞ்சம் நெகிழ
விலகுதல் சான்றோர் இயல்பு
இன்பம் / அதிகாரம் : 110 குறிப்பறிதல் :
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். [110:05]
விளக்கக் குறள் :
குறிக்கோள் எதுவுமின்றி; கண்சுருக்கி என்னைக்
குறிவைத்துப் பார்ப்பாள் மகிழ்ந்து
தொடரும்......கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்......
