அன்பின் உள்ளங்களே .,
இது எங்களைப் போன்ற ஆரம்பக்கட்ட / தமிழார்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .
இங்கே
’ர வருமா? / ற வருமா?? ல வருமா? / ள வருமா?? / ழ வருமா???
ன வருமா? /ண வருமா??
இங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா ? வராதா ??’
அவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி ?
-’’அதாவது.....இலக்கணப்படி....’’ என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்
சரி , அவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...?
ஒரு முயற்சிதானே ! செய்து பார்க்கலாம் . எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . பலர் தெளிவடைவார்கள் .
நான் ஆரம்பித்து வைக்கிறேன் ...
ர், ற் : [ சின்ன ‘ர’ (ர்) ,பெரிய ’ற’ (ற்) ] :
1)தரும் , பெறும் :
தருபவர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே /சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே ‘தரும்’ க்கு சின்ன ’ர’ போடுங்க
பிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே ’பெறும்’க்கு பெரிய ’ற’ போடுங்க
2) சிறிய , பெரிய ;
இதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .
’சிறிய’ வுக்கு பெரிய ற போடுங்க
’பெரிய’ வுக்கு சின்ன ர போடுங்க
[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]
3) அரிய, அறிய :
அரிய: – அருமையான / அபூர்வமான / வித்தியாசமான
தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்
-அதனால்சின்ன ’ர’ போடுங்க
அறிய: – தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறையவே உண்டு
--அதனால் பெரிய ’ற’ போடுங்க
ன்,ண் :
ன் – பெரிய ’ற’வுக்கு முன்னாடி சின்ன ’ன’வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]
ண் – ’ட’வுக்கு முன்னாடி பெரிய ’ண’ வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]
ல்,ள்,ழ்:
ருல் என முடியும் சொல் தமிழில் கிடையாது . ( ருகரத்தைத் தொடர்ந்து லகரம் வராது .) எனவே ரு வைத் தொடர்ந்து ல் வராது ...
( நன்றி ; கல்பட்டார்,வேந்தன் அய்யா)
2 comments:
தெளிவு படுத்தியமைக்கு நன்றிங்கைய்யா.
பகிர்வுக்கு நன்றிங்க
Post a Comment