
சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டது
சமயமும் இதோ வந்துவிட்டது
தொடங்கிவிட்டது புதிய வாழ்க்கை
தொடங்கப்போகிறது முதல் இரவு
எனக்கான துணை அவனை
எதிரே முதன்முதலாய்ப் பார்க்கிறேன்
எதற்காக என்றே தெரியவில்லை
எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை
என் தகுதிக்கு இது சரியான இடமில்லை
எனக்கு இதில் உடன்பாடு இல்லை
என்றாலும் வேறு வழி இல்லை
எனது குடும்பச் சூழல் சரியில்லை
முகம் முழுவதும் பதட்டம்
முதல் அனுபவமும் இதுதான்
முழு இரவும் தூங்காமல்
விழித்திருக்க வேண்டுமோ?
இதுவரை ஒருநாளும் இருந்ததில்லை
இனியும் முடியுமா தெரியவில்லை
துடிக்கும் நெஞ்சோடு காத்திருக்கிறேன்
அனைவரும் தூங்கும்வரைப் பார்த்திருக்கிறேன்
அத்தனை பேரும் தூங்கிய பின்
ஆள் அரவம் ஓய்ந்த பின்
மெல்ல சன்னலைப் பூட்டி
மெதுவாக கதவை சாத்தி
படுக்கையை உதறி விரித்து
படுத்து உறங்கப் போகி....
இருங்கள்,இருங்கள் உங்களிடம்
இதுவரை நான் சொல்லவே இல்லையே!
இரவுக் காவலாளி வேலை!!
இன்றுதான் சேர்ந்து இருக்கிறேன்!!!
1 comment:
உறவிலு காவல் உண்டு நண்பரே ! ஒருவருக்கொருவர் காவலானால் சிரப்பு. ஒருவர் மறறவருக்கு காவலானால் கடமை. ஒருவருமே காவல் இல்லயெனில் ரத்து - சித்தன்
Post a Comment