இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Sunday, December 28, 2008
இப்போதாவது முதலடி....
அமிழ்தினிய தமிழ்
அந்நிய மோகத்தால்
ஆங்கில மொழி தாக்கத்தால்
ஆழி நோய்க்கு ஆட்பட்டது போல
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது
அடித்தளமே கொஞ்சம்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது
இது தான் தருணம்
இனியும் தாமதித்தால்
இலக்கியத் தமிழ் அல்ல
இனிய பேச்சுத் தமிழும்
இனிமேல் இங்கே
இல்லாமல் போகும்
அவசரச் சிகிச்சையாய் சில
அடிப்படை மாற்றங்கள்
அதிரடியாய் செய்ய வேண்டும்
அதுவும் உடனடியாய் செய்யவேண்டும்
தமிழ் கூறும் நல்லுலகில்
அலோவும் சாரும்புகுந்து
அவதிப்படாத அவதிப்படுத்தாத
தமிழ் வாய் ஏதேனும் உண்டா?
அலோவுக்கென தனியாய்
ஆழக்குழி தோண்டி
அதிலும் அதை
அடியில் வைத்துப்
அழுந்தப் புதைக்கவேண்டும்
சார் என்ற சொல்லே தமிழ்
சரித்திரத்தில் இல்லாமல்
சரி செய்யவேண்டும்
எளியோரைச் சேரும் வகையில்
இனிய மாற்றுச் சொற்களை
இங்கே அறிமுகம் செய்வோம்
இதை மற்றவருக்கும் சொல்வோம்
முதலடியை நாமே
முன் வந்து வைப்போம் !
முன் மாதிரியாய் நம்மையே
முன் வைத்து நிற்போம் !!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழ் மொழி வளர வேண்டும் எனில் தனிநாடு வேண்டும்.அதுவரை நீர் என்ன செய்தாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை.தமிழ் மொழி ஆராய்ச்சிகள் எல்லாம் இப்போது குறைந்துவிட்டது.காரணம் தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற குறுகிய நோக்கோடு தமிழர்களே தமிழ் படிப்பது இல்லை.
Post a Comment