+acd.jpg)
மந்தையில்
மொந்தையாய் சில ஆடுகள் .......
கர்வத்தோடு தலை நிமிர்ந்து
கம்பீரமாய்த் திறிகின்றன .........
முதுகிலுள்ள
அடையாளக் குறியீடு
அனைவருக்கும் தெரியும்படி
ஆணவத்தோடு அலைகின்றன...........
’’சனி இரவில்
வழக்கம்போல வண்டி வருமே....
’அவங்க’ போன மாதிரியே
வாகனமேறி பயணம்
நாங்களும் போவோமே’’
குதூகலத்தில் பெருமிதத்தோடு
குதியாட்ட்ம் போடுகின்றன .......
’போகும்’ இடம் தெரியாத
’போய்’ச் சேரப்போகும்
அந்த ஆடுகள் .............................!
No comments:
Post a Comment