அரவமற்ற ஆலயம் ...
கருவறையில் கடவுளும்...
இறுகிய மனதுடன் எந்தன்
கோரிக்கையோடு நானும்...
உருகிக் கரைந்து
இருளை முடிந்த அளவுக்கு
விரட்டியபடியே மெல்லக்
குறைந்து கொண்டிருக்கும்
ஒற்றை மெழுகுவர்த்தியும்.....
கலைந்துபோன வாழ்வில்
விளக்கேற்றி வளமாக்க
மறுகி வேண்டி அவன்
திருமுகம் பார்க்கிறேன் .....
அவனும்...
கவலைதோய்ந்த முகத்தோடு
கண்ணிமைக்காமல் உறைந்துபோய்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்...
இன்னும் சில நொடிகளில்
எல்லாமும் முடியப்போகும்
அந்த மெழுகுவர்த்தியை .....
.
8 comments:
நல்லாயிருக்குண்ணே
நல்ல கவிதை.. மெழுகுவர்த்தி போன்றது தான் சிலரது வாழ்க்கையும்..
//Blogger அகமது சுபைர் said...
நல்ல கவிதை.. மெழுகுவர்த்தி போன்றது தான் சிலரது வாழ்க்கையும்..//
அப்படின்னு சொல்லிட்டு போக முடியாது சுபைர்.. சில கவிதைகள் போன்றதுதான் மெழுகுவர்த்தியும்னு சொல்லலாமா?
சென்ஷி,
கவிதைகளையும் மெழுகுவர்த்தியையும் நாம் சம்பந்தப்படுத்தவே கூடாது என்பது என் எண்ணம். மெழுகுவர்த்தி வெளிச்சம் தந்து அழிந்து போகும். ஆனால் கவிதைகள் காலத்தே நிலைத்து நிற்கும். இந்தக் கவிதை போல...
சுபைர்,
அப்படி சொல்லி நகர முடியாது. ஏன்னா ரெண்டுமே ஏதோ ஒரு இடத்தோட இருளை அகற்றுது. அதி முக்கியமா வரிகள் பத்தி சொல்லலாம்.
மெழுகுவர்த்தி உருகுனாலும் வரிகள் விழுது. கவிதைகள் எழுதினாலும் வரிகள் விழுது. அதோட தளம் அடித்தளம் பலமாகுது. இந்த மாதிரி நிறைய சொல்லலாம்
நல்ல கவிதை..
ஆனா மெழுகு அழிந்த பிறகு அந்த வெளிச்சம் போய்விடும். கவிதை படித்த பிறகு மனதில் வெளிச்சம் உருவாகும்.
அதனால் மெழுகுவர்த்தியும், கவிதையும் வேற வேற..
aravamatra allayam enkaeyum illai ella aalayathilum aravam (snake) kattayam irukkum
by Thanga.Rajendran
Post a Comment