இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Monday, July 5, 2010
என்னோட அப்பாவும்.............
அய்ய்ய்ய்யா.......
குட்டிராசு அப்பாரு
முதுகுமேல அவன
மூட்டைத் தூக்கிப் போறாரு
அய்யய்யோ.....
அழகோட அப்பாரு
அவனோட காதப் புடிச்சி
தரதரன்னு தெருவுல
இழுத்துக்கிட்டேப் போறாரு
அய்யோ அய்யோ.....
சுரேசோட அப்பாரு
அரைப்பெடல்ல சைக்கிள்
அவனுக்கு ஓட்டிக் காட்டி
கீழேவிழுந்து கெடக்காரு
ஓஓஓ.....
முத்துப்பேச்சி அப்பாரு
முக்குக்கடை மூலைல
முக்காடு போட்டுக்கிட்டு
புகையப் போட்டு நிக்காரு
அங்கப்பார்ரா.....
மாடசாமி அப்பாரு
அப்பத்தா திட்டுனாலும்
அப்படியே வாங்கீட்டு
வாயப்பொத்தி சிரிக்கிறாரு
ஆகா.....
சுந்தரியோட அப்பாரு
பொட்டிக் கடைல இருந்து
பொரிகடல உரலுமுட்டாயி
வாங்கீட்டுப் போறாரு
ம்ம்ம்ம்ம்.....
என்னோட அப்பாரு
.
.
.ம்
..ம்
...ம்
.......எங்கூட
இன்னும் கொஞ்சம்
நாளு கூட
இருந்திருக்கலாம் :(
.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Me the first. .....ஏக்கமும் சோகமும் சொல்லும் கவிதை . எங்க அப்பாவும் , இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்
நன்றி நிலா
எதிர் பார்புகளில் ஏக்கங்களை கசிய வைத்திருக்கிறிர்கள் . கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
Post a Comment