
அழகென்றால் அப்படியே
அள்ளி அணைப்பேன்
அழகில் என்னை இழப்பேன்
உலகம் தன்னை மறப்பேன்
கடலின் பொங்கும் நுரைபோல
கரைபுரண்ட வெள்ளைக்காடு
உள்ளம் தொலைத்தேன்
உள்ளே தொலைந்தேன்
வெளியேற மனமில்லை - அது
குண்டுமல்லித் தோட்டம்
வானவில்லைத் தெளித்தாற்போல்
வண்ண மலர்க் கூட்டம்
கண்மூடி இறங்கினேன்
என்னுள்ளே கிறங்கினேன்
மீண்டுவர மனமில்லை - அது
செண்டுமல்லித் தோட்டம்
பூரணநிலவின் உதயநிறத்தில்
சூரியனைப் பார்த்தபடியே
சிரித்துக் குலுங்கிய கானகம்
உள்ளே மெல்ல நுழைந்தேன்
உள்ளம் முழுதும் இழந்தேன்
உதறிவர இயலவில்லை – அது
சூரியகாந்திக் கூட்டம்
விண்ணுலகின் மஞ்செல்லாம்
மண்ணுலகில் புகுந்ததுபோல்
பஞ்சுப் பொதியாய் மலர்வனம்
நெஞ்சம் கொள்ளை கொள்ள
உள்ளே விழுந்தேன் - உடனே
உருண்டேன் புரண்டேன்
வெளியேர விழைந்தேன்
வழிதான் தெரியவில்லை – எனக்கு
வலியும் குறையவில்லை
அது...........
மலர் மூடிக்காத்திருந்த
நெறுஞ்சிமுள்க் காடு
அழகென்றால் அப்படியே
அள்ளி அணைக்க.............. !?!?!
.
2 comments:
//வழிதான் தெரியவில்லை – எனக்கு
வலியும் குறையவில்லை //
நைஸ் ஃபீலிங்... ரொம்ப தாக்கிடுச்சோ
உசிரேப் போகுதே உசிரேப் போகுதே ..:))
நன்றி நண்பரே
Post a Comment