’ராவுல கதை சொல்லி
தூங்க வைக்குது தாத்தா
காலைல காப்பியோட
வந்து எழுப்புது ஆத்தா...
இட்டிலிக்குத் தொட்டுக்க
மணக்கும் சட்டினி இருக்குது
தட்டுல இடியாப்பம்
மொத்தமாக் கொட்டிக் கெடக்குது..
எனக்கு சடைகட்டி
பொட்டுவைக்க போட்டி நடக்குது
எம்மாமன் பகலாட்டம்
கூட்டிப்போயி லூட்டி அடிக்குது...
சீறும்ஆறும் பயந்துப் பதுங்கி
எம்முதுகைத் தழுவி சொக்குது
ஊரும்பேரும் பதுங்கிப் பயந்து
என்பின் மெதுவாய் நழுவி நிக்குது...
சும்மாத்தான் முறைச்சவுடன்
வெலகி ஓடுது சூறாவளி
எம்மா நான் நினைச்சவுடன்
வந்து நிக்குது தீபாவளி...’
திடீரெனப் பொடரியில வெடிச்சு
மடியில எறங்கியது இடியொண்ணு
கண்ணச்சுத்தி மின்னலாப் பொரிபறக்க
என்னச்சுத்தி எல்லாமே கிறுகிறுக்க
மங்கலா முன்னால பொங்கிநிக்குது
மங்கம்மா போல எங்கவூட்டம்மா ...
”தலைக்கு மேலிருக்கும் வேலயில
பட்டப்பகல் வேளயில
சட்டிப்பானையத் தேய்க்காம
கெட்ட சொப்பனம் கேக்குதோ
பொட்டக் கழுதைக்கு.....”
........... :(
--
என்றும் அன்புடன் -- துரை --
1 comment:
அருமை.வாழ்த்துக்கள்.
Post a Comment