Monday, February 14, 2011

10 : தினமும் தான் போராட்டம்....!சூரியனுக்கே வெற்றி இன்று ...!!

bhgtw (387).gifbhgtw (364).gif

வேருக்கு நீரில்லாப் பருவத்தில்

கருகாமல் உயிர் பெருக்க

தருவெல்லாம் பசிபொறுத்து

இரவெல்லாம் காத்திருக்க...


வாழ்வளிக்க வானிலிருந்து

துகள்துகளாய் தவழ்ந்திறங்கி

துளியாய் ஒன்றாகி உருவாகி

இலைகளைத் தொட்டவுடன் தங்கி

தலைவழி உணவாகியது போக

மீதமிருந்தது தேங்கி இருந்தது

புல்லின் நுனியின் முனையிலும்....

தாமரையின் இலையின் நடுவிலும்....


கிரீடம் கிடைத்த கர்வத்தில்

புல்தன் நிலையில் நிமிர்ந்திருக்க...

தன்னிலைதான் பெருமையென்று

தாமரை இலையும் மிதந்திருக்க...


புல்லின் கர்வத்தைத்

தட்டிப் பறித்திட

காற்றும் திட்டமிட...

இலையைக் கவிழ்க்கும்

அலையை எழுப்ப

கலங்கிய குளமும் முயல...


நடப்புகளைக் கவனித்தபடி

நிகழ்வுகளைக் கணித்தபடி

வெற்றிச் சிரிப்பூடன்

ஏற்கனவே பனித்துளியை

பருகத் தொடங்கி இருந்தான்

அதிகாலைச் சூரியன்......

tyhjui (64).gif
[ நன்றி :பாலாஜி ராமானுஜம்,தேசிங்கு ராஜா/ அண்ணாமலை]

Tuesday, February 8, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(11) ஈரிலக்க எண்களின் வர்க்கம் (ஸ்குயர்) :


முறை 1 :

எ.கா 1): 58 x 58

  • முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும்( 5 x 5 = 25), அடுத்த இலக்கத்தின் வர்க்கத்தையும்(8 x 8 = 64) தொடர்ந்து எழுதிக் கொள்ளவும் = 2564

· இரு இலக்கங்களையும் பெருக்கி 20 ஆல் தொடர்ந்து பெருக்கவும் . ( இங்கே 20 எல்லா ஈரிலக்க எண்களுக்கும் பொதுஎண்/ஸ்டாண்டர்டு நம்பர்) =5 x 8 x 20 = 800

இரண்டையும் கூட்டினால் விடை = (2564 + 800) = 3364


எ.கா 2): 36 x36

3 x 3 = 9 ...........6 x 6 = 36 .................................... = 936 +

3 x 6 x 20 ..................................................................... = 360

விடை . ............................................................................= 1296


முறை 2 :

கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .

m11.jpg
சில பயிற்சிகளில் எல்லாம் எளிதாய் அமைந்துவிடும் ...வாழ்த்துகள்


Friday, February 4, 2011

ராணி..மகாராணி...ராஜ்ஜியத்தின் ராணி......!

a.gif

ராவுல கதை சொல்லி

தூங்க வைக்குது தாத்தா

காலைல காப்பியோட

வந்து எழுப்புது ஆத்தா...


aaa.gif

இட்டிலிக்குத் தொட்டுக்க

மணக்கும் சட்டினி இருக்குது

தட்டுல இடியாப்பம்

மொத்தமாக் கொட்டிக் கெடக்குது..


a.gif

எனக்கு சடைகட்டி

பொட்டுவைக்க போட்டி நடக்குது

எம்மாமன் பகலாட்டம்

கூட்டிப்போயி லூட்டி அடிக்குது...

aa.gif

சீறும்ஆறும் பயந்துப் பதுங்கி

எம்முதுகைத் தழுவி சொக்குது

ஊரும்பேரும் பதுங்கிப் பயந்து

என்பின் மெதுவாய் நழுவி நிக்குது...

EMO (278).gif

சும்மாத்தான் முறைச்சவுடன்

வெலகி ஓடுது சூறாவளி

எம்மா நான் நினைச்சவுடன்

வந்து நிக்குது தீபாவளி...


திடீரெனப் பொடரியில வெடிச்சு

மடியில எறங்கியது இடியொண்ணு


கண்ணச்சுத்தி மின்னலாப் பொரிபறக்க

என்னச்சுத்தி எல்லாமே கிறுகிறுக்க

மங்கலா முன்னால பொங்கிநிக்குது

மங்கம்மா போல எங்கவூட்டம்மா ...

eyes8[1].gif

தலைக்கு மேலிருக்கும் வேலயில

பட்டப்பகல் வேளயில

சட்டிப்பானையத் தேய்க்காம

கெட்ட சொப்பனம் கேக்குதோ

பொட்டக் கழுதைக்கு.....


hgj (3).gif........... :(


--
என்றும் அன்புடன் -- துரை --

Thursday, February 3, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(10) அதிசயம்...உங்களை அதிரவைக்கும் விடை




அதிசய எண்கள் :

இந்தக் கணக்கை செய்துபாருங்கள் ..முடிவில் வரும் விடை உங்களை அதிரவைக்கக் கூடிய அதிசயமான ஒன்றாக இருக்கும்.:)

குறிப்பு : இதற்கு 12 இலக்க கணிப்பொறி[12 டிஜிட் கால்குலேட்டர் / கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டர்] தேவை
(அல்லது)
தொடக்க எண்ணை 1,2,3க்குள் தேர்ந்தீர்கள் என்றால்
சாதாரண கணிப்பொறியே போதுமானது

செய்முறை :
  • ஒரு 10 இலக்க எண்ணை எடுத்துக்கொள்ளவும் ..( உங்களது அலைபேசி எண்ணாக இருந்தால் நல்லது )
  • அதில் முதல் 6 இலக்கங்களை எடுத்துக் கொள்ளவும் (######)
  • 80ஆல் பெருக்கவும் (x 80)
  • 1 ஐக் கூட்டவும் (+1)
  • 250 ஆல் பெருக்கவும் (x 250)
  • கடைசி 4 இலக்கங்களைக் கூட்டவும் (+ ####)
  • மீண்டும் கடைசி 4 இலக்கங்களைக் கூட்டவும் (+####)
  • 250 ஐக் கழிக்கவும் (- 250)
  • 2 ஆல் வகுக்கவும் (/ 2)
  • = xxxxxxxxxx
இப்பொழுது திரையில் வந்திருக்கும் விடை உங்களை ஆச்சரியத்தில் / அதிர்ச்சியில் ஆழ்த்தும் ...........அதிரவைப்பதாய் இருக்கும்..:))

வாழ்த்துகள் ...........


Wednesday, February 2, 2011

ஆண்மையின் ரகசியம் இதுவாகவும் இருக்கக்கூடும்......!

வெளியே.....

அலுவலக ஆளுமையால்

வெளியுலக அடக்குமுறையால்

வாழ்க்கை நடைமுறையால்

தலைதூக்க வழியின்றி

அழுத்தப்பட்ட ஆண்மை.....


உள்ளே....

சாதகச் சூழலில்

சூழ்ந்திருக்கும் வெற்றிடத்தில்

எதிர்ப்பில்லா மனையாளிடம்

ஏதுமறியாக் குழந்தையிடம்

வெடித்துக் கிளம்புகிறது....

மீசையைத் திருக்கியபடி

விசுவரூபம் எடுக்கிறது .....


நிமிர்ந்த மீசையின் நிழலில்

மறைந்த அடர்ந்த ஆழத்தில்

புதைக்கப் பட்டிருக்கக்கூடும்

தேங்கிய வலிகளும்

ஏங்கிய சோகங்களும்

பொங்கிவழியும் ஏமாற்றங்களும்.........


வாய்ப்பிருக்கும்

இந்த உண்மையை

நாமும் ஏற்றுக்கொள்வோமே....


பாவம்.....!

இதைத் தன்மையாய்

அவர்க்கும் புரியவைப்போமே....


ஆமாம்......!!

’அந்த’ ஆண்மையை

மன்னித்து விட்டுவிடுவோமே......

Tuesday, February 1, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(9) பெருக்கல் ...ஈரிலக்க எண்கள்.. !

அன்பர்களுக்கு .......
முந்தைய பதிவை ஒரு முன்னோட்டமாகக் கொள்ளவும் ....
தொடரும் நடைமுறையை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள் ....
வரப்போகும் பெரிய கணக்குகளுக்கு இதுதான் அடிப்படையாக இருக்கும்......

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(9)

இனம் சார்ந்த ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!

( எளிய [சார்ட் கட்] முறைக்கான அடிப்படை )

அ) 10 முதல் 19 வரை :


எ.கா 1): 12 x 13

முதல் எண்ணுடன்(12)..பெருக்கும் எண்ணின்

ஒற்றை இலக்க எண்ணைக்(3) கூட்டி ,

பத்திலக்க எண்ணால்(1) பெருக்கவும் ....................................= [12 + 03 ] x 1 = 15_

இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்

எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து......... ........................... = 02 x 03 = 06

கூட்டினால் வந்துவிடும் விடை........................................................................ = 156

இன்னும் விளக்கமாக :

maths 9 part 1.jpg

maths 9 part.jpg

(முக்கியக் குறிப்பு : வழக்கமாக விடைகாண...பெருக்கிவரும் முதலெண்ணுக்கு கீழே ..அடுத்த எண்ணை வலமிருந்து இடமாக ஒரிலக்கம் தள்ளி எழுதிக் கூட்டுவோம் .....

இனி வரும் எளியமுறை(சார்ட்க்கட்)முறைகளில் ..இடமிருந்து வலமாக ஒரிலக்கம் தள்ளி அமைத்துக் கூட்ட வேண்டும்..)


ஆ) 20 முதல் 29 வரை .!

எ.கா 1): 22 x 23

முதல் எண்ணுடன்(22)..பெருக்கும் எண்ணின்

ஒற்றை இலக்க எண்ணைக்(3) கூட்டி ,

பத்திலக்க எண்ணால்(2) பெருக்கவும் ......................................= [22 + 03 ] x 2 = 500

இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்

எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து.............................................= 02 x 03 = 06

கூட்டினால் வந்துவிடும் விடை.......................................... .................................= 506


இ) 30 முதல் 39 வரையிலான எண்களின் பெருக்கல் .!

மேற்கண்ட முதல்(ஸ்டெப்) நடைமுறையில் 2க்குப் பதிலாக 3 ஆல் பெருக்கிக் கொள்ளவும் ........


ஈ) 40 முதல் 49 வரைக்கும் 4 ஆலும் ...........

தொடர்ந்து...............

ஐ) 90 முதல் 99 வரைக்கும் 9 ஆலும் பெருக்கினால் போதும் .

அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...

இரண்டு முறை மனக்கணக்காகவே செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....

வாழ்த்துகள் ....:)


Monday, January 31, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(8) பெருக்கல் ...ஈரிலக்க எண்கள்.. !

.task; (140).gif


10 முதல் 19 வரையிலான ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!


எளிய முறை : 1

எ.கா 1): 12 x 13

  • .முதல் எண்ணுடன் (12).... பெருக்கும் எண்ணின் ஒற்றை இலக்க எண்(03)ணைக் கூட்டி
பத்திலக்க எண் மதிப்பால் (10) ஆல் பெருக்கவும்..... ........................= [12 + 03 ] x 10 = 150
  • .இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கி .............. = 02 x 03 = 06
  • .கூட்டினால் ( 150 + 06 )வந்துவிடும் விடை.................................... ...................... 156

எ.கா 2) : 16 x 14

  • (16 + 4) x 10 = 200 + (6 x 4) = 224

அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...
இரண்டு முறை செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....

அடுத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிடலாம் :)))

Saturday, January 29, 2011

யாத்தே.....! என்ன செய்யப் போறேன்....!!



வீதியெங்கும் பரபரப்பு

விடிந்தால் தீபாவளி...

விதியை நொந்தபடி நான்....


பதறிப் போயிருக்கிறேன்

கையிருப்பும் காலியாகி இருந்தது...


யாத்தே......

என்ன செய்வேன்..?

எப்படி சமாளிப்பேன்..??

இதுதான் கடைசியும் கூட...........


வெறுமையால் நிறைந்திருக்கும்

அந்தக் குடிசையின் தரையில்

படுத்திருக்கிறார்கள் அவர்கள்


ஏதோ புரிந்ததால் கண்ணைமூடி

தூங்கியதுபோல நடிக்கிறது மூத்தது...

எதுவும் புரியாததால்

கேள்விகளால் துளைத்தபடி

புரண்டுக்கொண்டே இருக்கிறது சின்னது...


அம்மா...இது வடை தானே ??


பதட்டத்தை மறைத்தபடி

காதிலெதுவும் கேட்க்காததுபோல

இடையில் நிறுத்தாமல்

தொடர்ந்தபடி இருக்கிறேன் நான்...


அப்போ அந்த ராசா முன்னால

தொம்முன்னு குதிச்சதாம் ஒரு..........


சூழ்ந்திருக்கும் வீடுகளிலிருந்து

சூழ்ச்சி மணத்துடன் எழுந்து

கள்ளத்தனமாய்த் தவழ்ந்து

கூரையைப் பிளந்து நுழைந்து

குழந்தைகளின்முன் உருண்டு

குட்டிக்கரணம் அடித்தபடியே

என்னைக் கேலிசெய்து கொண்டிருக்கிறது...

விதவிதமாய் தாளிக்கும் சப்தமும்

வகைவகையான பண்டங்களின் வாசமும்....


திடீரெனத் துள்ளி எழுந்த ‘சின்னது

பிரகாசிக்கும் கண்களுடன்

மூச்சை இழுத்து விட்டு


ம்ம்ம்ம்......இது முறுக்கு...! என்றதும்

ஈரக்குலை அறுந்தது எனக்கு


கையைப் பிடித்து இழுத்து

முகத்தை அடிமடிக்குள் புதைத்து

உரத்த குரலில் ஆரம்பிக்கிறேன்

தெரியவில்லை என்றாலும்

புதிய கதையொன்றை ..............


ஒரே ஒரு ஊருல ..................

.

( நன்றி : கரு : ப்ராங்க்ளின் குமார்)

Wednesday, January 26, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(7) 5ல் முடியும் எண்களின் வர்க்கம் (ஸ்குயர்) ..ஒரு நொடியில் கண்டுபிடி...!

எளிய முறை : 5ல் முடியும் எண்களின் வர்க்கம் (ஸ்கொயர்) : EMO (298).gif

எ.கா : 1) இங்கே எடுத்துக்காட்டாக 35ன் வர்க்கம் கண்டுபிடிப்போம் ( 35 x 35 = ? )

# ) 5க்கு முன்னால உள்ள எண்ணை (3), அதன் அடுத்த எண்ணுடன்(4) பெருக்கவும் = 3 x 4 = 12
# ) வரும் எண்ணுக்குப் பிறகு 25 சேர்த்துக் கொள்ளவும் = 1225

#) அட....அவ்ளோதான் .....விடை வந்தாச்சு .......!


எ.கா : 2) அடுத்து 125ன் வர்க்கம் ( 125 x 125 = ? )

#) 5க்கு முன்னால உள்ள எண்ணை (12), அதன் அடுத்த எண்ணுடன்(13) பெருக்கவும் = 12 x 13 = 156
#) 156க்குப் பிறகு 25 சேர்க்கவும் = 15625 ...........
#) இவ்ளோதான் ... கணக்கு ...........:))உடனே பொடிசுகளுக்குச் சொல்லிக் கொடுங்க .....:))))