பெறுநர் : எம்புருசன் ,
.அயலகம்
எம் மாமாவுக்கு ..,
அயலகத்தில் நீ சுகமா ?
அருகிலேயே நானும் சுகமா ?
உனது தனிமை சுகமா ?
உடனென் இனிமை சுகமா ?
உனது மனம் சுகமா ?
உணர்ந்த எனது மணமும் சுகமா ?
உனது திமிர் சுகமா ?
அருகிலென் உயிரும் சுகமா ?
உனது தினவு சுகமா ?
உருகுமென் கனவும் சுகமா ?
உனது முன் கோபம் சுகமா ?
அதைத்தேடுமென் தாபம் சுகமா ?
உனது தெனாவட்டு சுகமா ?
மனதிலென் முகவெட்டும் சுகமா ?
உனதிரவுத் தூக்கம் சுகமா ?
விழித்திருக்குமென் ஏக்கம் சுகமா ??
நானிருக்கும் உனதுள்ளம் சுகமா ?
நீயில்லா என்மனப்பள்ளம் சுகமா ?
உயிருக்குள் ஊடுருவும் பார்வை சுகமா ?
உனைத்தேடி வாடுமென் வியர்வை சுகமா ?
எல்லாம் இங்கிருந்தும் நீயங்கு சுகமா ?
எதுவுமே இங்கில்லாத நானங்கு சுகமா ?
இப்படிக்கு
.உம் மனைவி
.வி. முத்துப் பேச்சி
.வடுகப் பட்டி
.
3 comments:
நண்பரே,
மின் தமிழில் தங்கள் ஆதங்கத்தைப் பற்றி படித்தேன். பின்னூட்டம் குறைவு என்றால் என்ன? நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கவிதைகளை படிப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
மணி
ஆஹா, அற்புதம் ரொம்ப அழகாயிருக்கு வாழ்த்துக்கள்.
annaa,puthukkavithai enru pulampi,palar vidum koochchalkalukkidaiyil,nalla tharaththudan thangal kavithaikalai kaankaiyil mikka magizhchchi...!
thodarnthum ezhuthungal...!
thambi,raavan rajhkumar-jaffna.
Post a Comment