Tuesday, September 14, 2010

அறிந்துகொள்வோம் இவர்களையும் ....!


குறுந்தகவல் இதழ்கள் :

12.09.10 . திருச்சி ; ஒரு சந்திப்பு ; 70பேர் சந்தித்துக் கொண்ட ஒரு சிறிய சந்திப்பு. ஆனால் கலைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு சந்திப்பு. குறுந்தகவல் (SMS) பறிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்கள் சந்தித்துக் கொண்ட ஒரு முப்பெரும் விழா . எளியோரின் இணையமாக மாறி இருக்கும் அலைபேசித் தகவல் பரிமாற்றத்தின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியின் சாட்சியான சந்திப்பு இது . இதற்குப் பின்புலமாக மறைவில் இருக்கும் சக்திகளை வெளிக்காட்டும் பதிவு இது .



SMS குறுந்தகவல் செய்தி . இன்றைய தொலைத் தொடபில் மிக முக்கியமான ஒன்று . வியாபார, விளம்பர நிறுவனங்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைத் தொடர்பாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இனிய , ஊக்கமளிக்கும் செய்தியும் இதில் உண்டு

.ஆம்

குறுந்தகவல் இதழ்கள் ....



20 க்கும் மேற்பட்ட குறுந்தகவல் இதழ்கள்.

தினம் ஒரு படைப்பாளியின் படைப்பினை ,கவிதையினை ,கருத்தினை தமிழகம் முழுவதும் குறைந்தது 10000 வாசகர்களிடம் குறுந்தகவல் மூலமாக கொண்டு சேர்க்கின்றன இவைகள் .



கண்காணாத இடத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை , அவர்களின் படைப்புகளை வெளியிட்டு ,

வெளி உலகுக்குக் காட்டி , அவர்களுக்கு ஊக்கம் ஊட்டி , புதிய கவிஞர்கள் , கலைஞர்கள் ,படைப்பாளிகளை உருவாக்கி வருகின்றன் .



முன்பெல்லாம்

படைப்புகளை உருவாக்கிவிட்டு ,

பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு ,

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த கவிஞர்கள், கலைஞர்கள் ஏராளம் ..



பொதுப் பார்வைக்கு சமர்பிக்கும் முறையறியாமல் ,

புதைந்து போன புதையல்களோ ஏராளம் , ஏராளம் ...........



இன்று நிலைமை மாற்றம் வந்திருக்கிறது . மாற்றாக ஒரு புதிய தொழில் நுட்பம் துணைக்கு வந்திருக்கிறது

தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம் போல் ,

கணினி , இணையத்தளம் தொட முடியாதவர்களின் முன்னால்

விரல் நுனியில் ஒரு இலவசப் பதிவுலகம் . அலைபேசியால் இணைக்கும் அற்புத உலகம் அது .



முக்கிய செய்தி ; இந்தச் செய்தி பரிமாற்றம் ஒரு இலவசச் சேவை . இவை இணைய கூகுள் ,யாகூ குழுமங்கள் போன்ற இலவசச் சேவை .. அனால் அவைகளைப்போல பலம் படைத்த பின்புலம் கொண்டவைகள் அல்ல. ஆம். ஒவ்வொரு இதழாசிரியரும் தனிமனிதனாய் நின்று தமிழுக்கு ஆற்றும் சேவை இது .


இந்த இதழ்களைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாழ்கையில் வசதியான இடத்தில் இல்லை . தானிருக்கும் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் பொருளாதார பலமில்லாத நடுத்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சராசரியானவர்கள்தான் . தனது தினக் கூலியில் இருந்து , மாத வருமானத்தில் இருந்து , பொருள் ஒதுக்கி இந்தச் சேவையைத் தொடர்பவர்கள் இவர்கள். பணிச் சுமைக்கு இடையிலும் , குடும்பச் சூழலுக்கு நடுவிலும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஊடாகவும் கடமையாக நினைத்து கருத்தாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல் வீரர்கள் இவர்கள் . எந்தவிதப் பலனும் எதிர்பாராமல் இவர்கள் ஒவ்வொருவரும் பிற முகமறியாத கலைஞர்களின் படைப்புகளை 500லிருந்து 1000 பேர்வரையிலும் கொண்டு சேர்க்கிறார்கள் குறுஞ்செய்திகள் மூலமாக .



’அப்படி என்னய்யா வந்துச்சு இவங்களுக்கு ?

பேசாம இருக்க வேண்டியதுதானே ??

எதுக்கு தேவையில்லாம இழுக்கணும் /சுமக்கணும் இதை ???’



பலகேள்விகள் தோன்றலாம் மனதுக்குள் ....!



அதற்கான விடையை என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் .தொடர்ந்து வருவது தற்பெருமை இல்லை . உண்மையை உலகுக்குச் சொல்லும் வேளையில் ( நெல்லும் நீர்பாய்ச்சும் வேளையில், சரிவிலுள்ள புல்லுக்கும் சிறிது கசிவது போல ) வெளிப்படும் செய்தி இது



நான் பிறந்த இடம் இது . நான் ஒரு கட்டுமானப் பொறியாளர் .ஆங்கிலவழியில் கல்வி கற்றவன் . கல்லையும் , மண்ணையும் , கலவையையும் , ,கட்டுமானத்தையும் தவிர எதுவும் தெரியாதவன் நான். 2008வரையில் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் கூட இல்லாதவன் நான். விளையாட்டாக நான் எழுதிய ஒரு 3வரிகளை திரு.கன்னிக்கோவில் ராஜா அவர்கள் (திருத்தம் செய்து) , அவரது SMS இதழில் நான் எதிர்பார்க்காத வேளையில் வெளியிட்டார் .

நமது படைப்பை கண்முன்னால் பார்க்கும் வேளையில் ’நம்மாலும் முடியும் ‘ என்ற எண்ணத்தை ,

நம்மேலுள்ள தன்நம்பிக்கையை எனக்குள்ளேயே ஆழமாய் விதைத்து விட்டது அந்த குறுந்தகவல் செய்தி

’அட நமக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறதே !!! , முயன்றால் நம்மாலும் முடியும் போல !!!’ என்று என்னையும் திசை திருப்பி விட்டது அது .



இரண்டே வருடங்கள்



குறுஞ்செய்தி இதழில் அறிமுகமாகி , இணையத்தில் இணைந்து ,( நன்றி : அய்யா . கிரிஜா மணாளன் அவர்களுக்கு )

இன்று எனக்கென வலைப்பூக்களை உருவாக்கி இருக்கிறேன் , ஒருங்குறித் தமிழில் ஒருவிரல் தட்டச்சில் ஓரளவு வேகம் காட்டுகிறேன் , கவிதைகளாய் கொடுக்கிறேன் , வெண்பாவாய் வடிக்கிறேன் , குறும்பாக்கள் தொடுக்கிறேன் , திருக்குறளுக்கு விளக்கமாக , குறளுரையாக 1330 புதியகுறள்களை வெண்பாவில் அமைத்திருக்கிறேன் .(எனக்குத் தெரிந்த அளவில்)



குறுஞ்செய்தி இதழ்களின் விளைவுக்கு நானே நேரடிச் சான்று’.

எங்கோ ஆரம்பித்து, எப்படியோ சென்று கொண்டிருந்தவன் , இன்று இங்கே வந்து நிற்கிறேன் .

( இது நல்லதா , கெட்டதான்னு நீங்கதான் சொல்லணும் :)



மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள் . , உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் .....

தமிழகத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்

குறுந்தகவல் இதழ்கள் : ஆசிரியர்கள்



கேகேஆர்-ன் SMS ஹைக்கூ: கன்னிக்கோவில்ராஜா,சென்னை[9841236965]

தேசிங்குராஜா குறுஞ்செய்தி இதழ்: இயற்கை சிவம்,விழுப்புரம்
[9941116068]

கேகேஐ குறுஞ்செய்தி இதழ் : கொள்ளிடம் காமராஜ்,திருச்சி

[9894058651]

சுந்தர் குறுஞ்செய்தி இதழ் : அண்ணாமலை,ஆரணி

[9842106170]

மழைத்துளி குறுஞ்செய்தி இதழ் : சத்யா

எண்ணத்தின் வண்ணம் : எம்.எஸ்.பாபு

ஜெயம் குறுஞ்செய்தி இதழ் : ஜெயக் குமார், அந்தியூர்

[9842163703]

வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ் :பாரதி ராஜா,பனையடி ஏந்தல்

[9894887705]

சம்பூரணம் குறுஞ்செய்தி இதழ் : தமிழாளி,அழகாபுரம்

[8144260620]

ராகா குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9786098440]

செந்தமிழ் குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9688429731]

சித்தன் குறுஞ்செய்தி இதழ் : நித்யானந்தம்,மாமண்டூர்

[9095942789]

தெனாலி குறுஞ்செய்தி இதழ் :கலைவாணி

உதயம் குறுஞ்செய்தி இதழ் : செல்லதுரை ,ஓசூர்

[9578129090]

சிற்பி குறுஞ்செய்தி இதழ் : ரம்யா,மாமண்டூர்

லிங்கம் குறுஞ்செய்தி இதழ் : ராமலிங்கம்,சிறுவந்தாடு

[9976227703]

யவசம் குறுஞ்செய்தி இதழ் : ஜானி அந்தோணிராஜ்,உறையூர்

[9842163703]

ஜாலி கவிக்கடல் : ஹயத்பாஷா , சென்னை

[9952071178]

தெரியுமா ? :ப்ராங்ளின் குமார்

[9843921471]

மற்றும்

யாழிசை : யாழி ,கோவை

[9976350636]




வேரின்றி மண்ணிலே நிற்பதாய் எண்ணியே
பாரமாய் எண்ணாதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரப் பாய்வோம்;யாம்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..


இந்த விதையை என்னுள் வித்தவர்கள் இவர்கள்


புதிய படைப்பாளிகளை உருவாக்கும்

இவர்களின் உன்னத உள்ளத்தை உணர்ந்து கொள்வோம் !

இவர்களின் தன்னலமில்லா உழைப்பு சிறக்க வாழ்த்துவோம் !!


சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி :


(சரஸ்வதி பஞ்சு (உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் , திருச்சி தலைமை) , கிரிஜா மணாளன், சேதுமாதவன் , சி.ம.சரவணன், ஆங்கரை பைரவி, நடராஜன்,கொள்ளிடம் காமராஜ்,முத்து நிலவன் ,பிச்சை முஹைதீன்,தஞ்சை மனோகர்,பேராசிரியர்.சந்திரா பெருமாள்,பாபு, தனலெட்சுமி பாஸ்கரன்,சேலம் சுமதி,ஜோதி லட்சுமி, சோமசுந்தரம்,ஸ்ரீகாந்த்(ஆல் இந்தியா ரேடியோ),யாழி , நாணல்காடான்,ப்ராங்ளின்குமார்,விநாயக மூர்த்தி, லெட்சுமணன்,மு.வேலா,அய்யாவாடி சத்யா,ஜெயக்குமார்,கீரைத்தமிழன்,ராஜீவ்காந்தி,சந்திரசேகரன்,சார்லஸ்,உதயகுமாரன் , யோகானந்தன், குமாரப்பாளையம் துரை, மற்றும் பெயர் அறியமுடியாத சகோதரர்கள் பலர் ...

வழக்கம்போல நான் தாமதம் :( . கோவையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு 11 மணிக்குக் கிளம்பி 1.45க்குத்தான் போய் சேர்ந்தேன் . காலை நிகழ்ச்சி முடிந்து பலர் கிளம்பி இருந்தனர் )



வாழ்க உறவுகள் !

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

No comments: