
கோடிகளை விழுங்கி
கோபுரங்களாய் எழும்பி
அங்கங்கள் அத்தனையும்
தங்கத்தால் இழைத்து
பரலோகத்தைப்போல்ப் பரந்த
பிரமாண்ட பிரகாரங்களுடன்
பரபரப்பாய் இருக்கிறது கோவில்.
பக்தியின் உச்சத்தில்
சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும்...
சத்தமாய் வேண்டிக்கொண்டு
சுற்றத்தை ஈர்த்துநிற்கும்........
சிக்கலைத் தீர்ப்பதற்கு
சதத்தில்(%) பேரம்பேசும்......
நேர்த்தியாய் உடுத்திய சுத்தமான பக்தர்கள்.....
பட்டாடைகள் பளபளக்க
அணிகலன்கள் தகதகக்க
வருவோருக்கெல்லாம் அருளை
வாரி வாரி வழங்கியபடியே
கற்பக்கிரகத்துள் கடவுள் சிலை......
கருவேல மரத்தின் நிழலில்
கருகிய புதரின் நடுவில்.......
குழந்தைகள் ஒன்றுசேர்ந்து
அழுக்குக் கைகள்கொண்டு
உடைந்த செங்கலையும்
உளுத்த செத்தையையும்
ஒன்றாய் அடுக்கி வைத்து
‘கோவில்’ என்று பெயரிட்ட
குவியலுக்குள் நுழைந்து
தலைக்குக் கைவைத்து
தரையில் படுத்திருக்கிறார்
கடவுள்.....................
[கரு : நன்றி: குதசெ : -சங்கர பாண்டியன்]
.
5 comments:
இருக்க வேண்டிய இடத்தில் இறைவன் இருக்கிறான்- எளிமையில்...!
கோவிலுள்ளக் கடவுளை
மனிதர்களிடம் சேர்த்து விட்டால் அவர்கள் வீடுகளில் மட்டும்
வாழட்டும் கடவுளென்றால்
கடவுள் காணாமல் போய் விடுவார் !
அருமை... எளிமையில் இறைவன்.
ம் அருமை
அன்பின் துரை
அருமை அருமை கவிதை அருமை
சிந்தனை உண்மை - அருமை
எளிய சொற்களில் உரத்த சிந்தனை - பலமான கருத்து
நல்வாழ்த்துகள் துரை
நட்புடன் சீனா
Post a Comment