எனது கண்களுக்குள் பார்த்தபடியே
பேசிக்கொண்டே இருக்கிறான்
அவன்........
பொய்...
அத்தனையும் பொய்....
அவன் வாயிலிருந்து வரும்
அத்தனையும் பெரும் பொய்.....
உண்மையைப் போலவே பொய்யையும்
திண்மையாய்ப் பேசுகிறான் அவன்....
எனக்கு எல்லாம் தெரியுமென்பது
அவனுக்கும் தெரியும்தான்
ஆனாலும்......
எப்படிதான் முடிகிறது
இப்படி எல்லாம் பேசுவதற்கு ....
எப்போதுதான் திருந்துவார்கள்
இத்தன்மை கொண்டவர்கள்......
பேசி முடித்துவிட்டான் அவன்
என்முகம் பார்த்து நிற்கிறான்
அவன் நிறுத்தத்தானே
காத்திருந்தேன் நானும்........
ஆவேசமாகத் தொடர்ந்து
பேச ஆரம்பிக்கிறேன்
உண்மையைப் போலவே
ஒரு பொய்யை நானும்.......
.
1 comment:
அன்பின் துரை - அருமை அருமை - கவிதை அருமை - அவனைப் போலவே அவளும் - இயல்பாய் பொய் பேசுகின்றனர் இருவருமே ! சிந்தனை அருமை = நல்வாழ்த்துகள் துரை நட்புடன் சீனா
Post a Comment