பசையில்லா வறண்ட
கரிசல் நிலத்தைப்
பரவலாய் ஆக்கிரமித்திருக்கிறது
பசுமையாய் கருவேலங்காடு.....
அடிமுதல் கலக்கும்
மிரட்டும் தோற்றத்துடன்
கூரிய முட்களும்
பாரிய கிளைகளுமாய்
பிரமாண்டமாய் காடு
என்கண் முன்னால்...
’பயனில்லாத அதனை
பங்கம் ஏதுமின்றி
எப்படி அழிக்கலாம்’
என்ற சிந்தனையில் நான்
இருக்கும் வேளையில்.....
என்னையும் தாண்டி
சருகொன்றைக் கொத்தியபடி
கருவொன்றைச் சுமந்தபடி
கூடுகட்ட இடம்தேடி
’அந்தக்’
காட்டுக்குள் மறைகிறது
சிட்டுக் குருவிஒன்று ..............
.
3 comments:
அருமை ... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
கவிதையின் மொத்த கருவும் இறுதி வரிகளில் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி
மிகவும் அருமை . பாராடுக்கள்.
Post a Comment