தண்ணீரில்லா அந்தக்
கிணற்றிலிருந்து
மீடகப் படுகிறது
ஒரு உப்பிய உடல்.......
சுற்றிலும் சுற்றங்கள்....
கண்ணீர் தேங்கிய கண்கள் ...
கவலை தோய்ந்த கணங்கள்...
எல்லாம் முடிந்து
எங்கோ.....
’அது’ எரியூட்டப்பட்டு
காற்றில் கரைந்தபின்பும்
இங்கே......
வெறுமையால் நிறைந்த
அந்தப் பாழும் கிணற்றின்
கைப்பிடி சுவரையும் தாண்டி
’கவனிப்பாரில்லாக் கவலையுடன்’
பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........
‘அதோடு’
சேர்ந்து விழுந்த
கரைசேராத சோகங்களும்..
அவிழாத முடிச்சுகளும்...
கொஞ்சம் கவனியுங்கள்...
உங்களின் காலடியிலும்
இருக்கக்கூடும்
இதுபோல
ஏதாவது ’ஒன்று’ ......!
1 comment:
//பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........
‘அதோடு’
சேர்ந்து விழுந்த
கரைசேராத சோகங்களும்..
அவிழாத முடிச்சுகளும்...
/////
சோகம் சுமக்கும் வார்த்தை அலங்காரம் கவிதை வரிகளில் அருமை . பகிர்வுக்கு நன்றி
Post a Comment