காடெல்லாம் தேடியும்
மேடெல்லாம் ஓடியும்
தவத்தினை நாடியும்
கோவிலைச் சுற்றியும்
ஆலயத்தைத் தட்டியும்
பள்ளியில் முட்டியும்
கடவுளைக் காணும்
வழியெதுவும் தெரியாமல்
நித்தமும் எனது
சித்தம் கலைந்து சிதறவே...
எல்லாம் உதறி
போதுமென்ற நிலையில்
வெளியேறும் வேளையில்
எதிர் நிலையிலுள்ள
கண்ணாடியில் தெரிந்து
மறைகிறது......
எனது பிம்பம்.......
.
(பி.கு : படம் நானில்லை :)
3 comments:
அருமையான கவிதைங்க
நம்மிலும் கடவுள் இருக்கார்ங்கறத அற்புதமா சொன்னிங்க
நன்றி அய்யா
அட இவ்வளவு எளிதாக கடவுள் நம்முள் இருக்கிறார் என்பதனை அழகாக கவிதையாக வடிக்க துரையினால் தான் இயலும்
நன்று நன்று
Post a Comment