Sunday, July 5, 2009

வெடித்து வா என் இளைஞனே.....!



இன்று (ஜுலை,4),
சுவாமி விவேகானந்தரின் நினைவுநாளில்,
அவரது பாதங்களில் சமர்ப்பணம் :



துவண்டு கிடக்கும் இளைஞனே - நீ
துடித்துக் கிளம்பும் நேரமிது !

விரிந்த வானத்துக்கு அடியில் - இந்த
பரந்த பூமியின் வெளியில் - உனக்கும்
கிழக்கு திசையுண்டு - அங்கே
விடியல் என்பது தினமும் உண்டு

நீருக்குள் திணறும் மீனும் உண்டா ?
தண்ணீருக்குள் மூழ்கும் தாமரை உண்டா ?
தரைநோக்கி எரியும் நெருப்பு உண்டா ?
தன்நிலை உணர நீ ஏன் மறுக்கிறாய் !

பல லட்ச அணுக்களை நீ
பந்தயத்தில் செயித்ததனால் தான்
பாரினில் பிறந்து இருக்கிறாய் !
வெற்றிக் கணக்கில்தானே உன்
வாழ்வையே தெடங்கி இருக்கிறாய் !!

கடந்தகால நினைவுகள் ஏமாற்றம் தரும்
எதிர்கால எண்ணங்கள் ஏக்கம் தரும்
நிகழ்காலம் மட்டுமே உனக்கு ஏற்றம் தரும்

கடந்தகால பாடத்தோடு
எதிர்காலத் திட்டத்தோடு
நிகழ்காலத்தில் நடை போடு
நாளைய கனவு மெய்ப்படும்-அந்த
வானம் உனது வசப்படும்


வாசல் மூடி உள்ளே இருக்கும்வரை
உனக்கு இங்கு வானமே இல்லை
கதவு திறந்து வெளியே வந்துபார்
உனக்கு அந்த வானமே எல்லை

'இனியொரு விதி செய்வோம்'
சொல்லிக் கடந்தது ஒரு நூறாண்டு
வெடித்து வா வெளியே - நாம்
இணைந்து இனியாவது செய்வோம் !

4 comments:

தேவன் மாயம் said...

நீருக்குள் திணறும் மீனும் உண்டா ?
தண்ணீருக்குள் மூழ்கும் தாமரை உண்டா ?
தரைநோக்கி எரியும் நெருப்பு உண்டா ?
தன்நிலை உணர நீ ஏன் மறுக்கிறாய் !///

அழகு! ஊக்கமான கேள்விகள்!!

தேவன் மாயம் said...

பல லட்ச அணுக்களை நீ
பந்தயத்தில் செயித்ததனால் தான்
பாரினில் பிறந்து இருக்கிறாய் !
வெற்றிக் கணக்கில்தானே உன்
வாழ்வையே தெடங்கி இருக்கிறாய் !!///

பிறக்கும் முன்பே வெற்றி!!

தேவன் மாயம் said...

கடந்தகால நினைவுகள் ஏமாற்றம் தரும்
எதிர்கால எண்ணங்கள் ஏக்கம் தரும்
நிகழ்காலம் மட்டுமே உனக்கு ஏற்றம் தரும்///

நம்பிக்கையூட்டும் வரிகள்!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்