
ஜுலை 21
சிவாஜி அய்யாவின் நினைவு நாளில்
அவர் பாதங்களில் சமர்ப்பணம் :
இமயம் :
தூரமிருந்து பார்ப்போருக்கு
...கரும் புள்ளியாய்ப் புரியும்
அருகில் வருவோருக்கு அது
...வெறும் முக்கோணமாய்த் தெரியும்
நெருங்க ஆரம்பிக்கும்போது தான்
...அதன் பிரமாண்டம் கிட்டும்
ஒவ்வொரு திசையிலும் அது
...வெவ்வேறு பரிமாணம் காட்டும்
ஏறும் உங்களுக்குள் இதமாய்
...அதன் புனிதம் இறங்கும்
வெறுமையான மனதுக்குள்ளும்
...அதன் இனிமையை இறக்கும்
உச்சியை அடைய வேண்டாம்
...உணர்ந்தாலே போதும்
நவரச உலகத்தையே மெதுவாய்
...நமக்குள் உணர்த்திவிடும்
இமயம் _ அதுதான்
இமயம்
இந்தியாவில் உண்டு
இமயம் இரண்டு
வடக்கில் ஒன்று - இங்கே
தெற்கில் ஒன்று
6 comments:
ரெண்டுமே அசைக்கமுடியாதவை. தெற்கே புகழ்,வடக்கே மண்.
மண்ணில் போன புகழ்.
நடிப்புலக இமயத்தை யார் மிஞ்ச முடியும்?
கவிதை நல்ல ஒப்பீடு!
அருமை...!!!!!!!!!
நடிகர் திலகம் நினைவு நாளில் அருமையான் நினைவு கூறல்.
என்றும் வாழ்வார் நம் நடிகர் திலகம்.
Vadakkil yaaru, can u please tell?
Post a Comment