
26-07-09 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :
எனது வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :
கார்கில் - இங்கே
சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்
காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்
எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் வாசம்
வெண்மையே விரவியிருக்கும்
...வண்ணமற்ற பிரதேசம்
வாழ வழியில்லாத
...வஞ்சிக்கப்பட்ட பிரதேசம்
ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்
அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்
அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி
உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்துமடிவேன்
நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...
வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......
2 comments:
ஒரு ராயல் சல்யூட்!!
கார்கில் வீரர்களுக்கு வீர வணக்கம்
Post a Comment