Friday, September 11, 2009

தெரியுமா பாரதமே...? இன்று பாரதியின் நினைவுநாள் ........!!


மகாகவியின் நினைவு நாளில் ( 11-09-2009)
அவரின் நினைவில் :


ஏ தேசமே..
என் இனிய பாரத தேசமே...


உனக்காகவே போராடி
உனக்குள் புதைந்த ஒருவனை

அறிமுகப் படுத்துகிறேன் உனக்கு !
அத்தனையும் வாங்கிக்கொள் உனக்குள் !!

அவன் ........

கடவுளிடம் வாதாடும்
திண்மை கொண்டவன்...

வீணையின் புனிதமாய்
தன்னை அறிந்தவன்....

காலம்கடந்து சிந்தித்து
காணாமல் போனவன்....

கனவுகளில் வாழ்ந்து
காற்றில் கரைந்தவன்.....

ஏட்டு சுரைக்காயின்
உண்மை உணர்ந்தவன்.....

எதிர்பார்த்து ஏங்கியே
ஏதுமின்றி ஏமாந்தவன்.....

எதற்கும் பணியாமல்
எல்லாம் இழந்தவன்....

ஊருக்கு உழைத்து
தெருவில் நின்றவன்....

பதுமைப்பெண் வேரறுத்து
புதுமைப்பெண் வரவேற்றவன்....

பாரதி ! - ஆம்
பாரதி என்ற பரதேசி அவன் ......!


நெஞ்சிலேதும் இடமுண்டா? - அவனைப்பற்றிய
நினைவுகள் ஏதும் மிச்சமுண்டா??
....................................................
...................................................

ஏ தேசமே.......!
என் இனிய பாரத தேசமே.......!


தேசத்தின் கனவுகள் மெய்ப்பட
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !

இனியொரு விதிசெய்ய
இறந்து விரும்பியவனின் ஆசைகளை
இன்றுவரை நிறைவேற்றாத
இனிய தேசமே !

காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !

இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேர்கூட அனுப்பாத
இந்திய தேசமே !

வா.......................
இதுதான் சமயம் !
பரிகாரத்திற்கு இதுவே சமயம் !!

அவனது கனவு மெய்ப்பட
ஆவன செய்வோம் ! - அதற்குடனே
ஆவணம் செய்வோம் !!

இளையோர் வாழ்வு வளம்பெற
இனியொரு விதி செய்வோம் ! - வா
இனியாவது செய்வோம் !!...


.

2 comments:

குப்பன்.யாஹூ said...

கவிதை அருமை. நன்றிகள் பாராட்டுக்கள்.

ஆனால் ஒரு வரி எனக்கு உடன்பாடு இல்லை.

காலம் கழித்து சிந்தித்தவன் பாரதி என்பது

உண்மையில் காலத்திற்கு முன்பே சிந்தித்து காணமல் போனவன் என்று சொல்லலாம்.

1910 லேயே 2005 பற்றி சிந்தித்து எழுதியவன், எப்படி கமல் 1995 இல 2004 க்குரிய திரைப்படம் எடுத்து தோல்வி அடைகிறாரோ அது போல.

உமா said...

//ஆனால் ஒரு வரி எனக்கு உடன்பாடு இல்லை.

காலம் கழித்து சிந்தித்தவன் பாரதி என்பது//

இப்போட்து காலம் கடந்து என்றுள்ளது. சரியாகவே படுகிறது. நிகழ்காலம் கடந்து எதிகாலம் பற்றியும் சிந்தித்தவன் என.

கேட்க வேண்டியக் கேள்விதான் இது.

ஆனாலும் உங்களைப் போல என்னைப் போல எவ்வளவோ பேரை அவன் வழி நடத்திக்கொண்டுதான் உள்ளான். இன்னும் இருப்பான். அவனுக்கு சாவே கிடையாது.

வாழ்க பாரதி புகழ்.வளர்க! வளர்க!
வாழ்த்துக்கள்.