Tuesday, January 25, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(6) மரத்தின் / உருளையின் விட்டம் கண்டுபிடி..!

எளிய முறை :
உருளையின் விட்டம் கண்டிபிடி : addemoticons153.gif

நடைமுறையில் ஒரு உருளையின்/ கல்த்தூணின்/மரத்தின் குறுக்கு விட்டத்தினைக் காண்பதற்கான எளியமுறை : ( = %99.9 சரியாக இருக்கும் )

“வளையதைக் கிளையதாகி,
கிளையதை எட்டதாக்கி,
எட்டில் மூன்றைத் தள்ளி
நின்றது நெற்றிக்கனம்.”
  • வளையதை:-முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும்.
  • வளையதைக் கிளையதாக்கி:- அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும்.
  • கிளையதை எட்டதாக்கி:-அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
  • எட்டில் மூன்றைத் தள்ளி:-அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்.
  • நின்றது நெற்றிக் கனம்:- 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.
[நெற்றிக்கனம் என்பது ’விட்டம்’ அதாவது உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றமான வட்டத்தில், இரண்டு ஆரங்கள் சேர்ந்தது, விட்டம் = நெற்றிக் கனம்.]

இன்னும் எளிமையாக = உருளையின் சுற்றளவை நூலில் எடுத்து , முனைகளை சேர்த்து 4 முறை தொடர்ந்து மடித்தால் கிடைக்கும் 16 இழைகளில் 5 இழைகளின் நீளம் ....உருளையின் விட்டமாகும்

செய்து பாருங்களேன் .......................

( நன்றி :
SRI. venkatachalam Dotthathri,SRI.Paramasivan )

1 comment:

அன்புடன் நான் said...

புதுமையாதான் இருக்கு பகிர்வுக்கு நன்றிங்க.