Thursday, October 16, 2008

ஆன்-லைன் வர்த்தகம்?


கன்னியாக்குமாரியில்
இல்லாத பொருளுக்கு
காஷ்மீரிலிருந்து
பேரம் பேசி

விவசாயியிடம் விலைகுறைத்து
விநியோகத்தில் விலைகூட்டி
தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்

சீர்திருத்தம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கையை
சீரழித்துக்கொண்டிருக்கும் அது

ஆன்-லைன் வர்த்தகமா?
ஆப்-செய்யும் வர்த்தகமா! இல்லை
ஆப்பு வைக்கும் வர்த்தகமா!!

2 comments:

Vishnu... said...

கவிதை அருமை
நல்ல கேள்வி நண்பரே ...
ஆன் லைன் வர்த்தகம் ஆப்பு வர்த்தகமே ..

அன்புடன்
விஷ்ணு

வனம் said...

வணக்கம்

நல்ல (இதுதான் சரியான பதம் என நிணைக்கின்றேன்) கவிதை

தேவையான கேள்விகள்


\\ தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்\\
ஏன் விவசாயிகள் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு வரகூடாது?

நன்றி