
திருமணம் முடிந்து
இருமனம் இணையும்
தேனிலவும் தாண்டியது
தவிர்க்கவே முடியாத அந்த
தனிக்குடித்தனமும் ஆரம்பமானது
எனக்கு அவளைப் பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது
என்ற நினைப்பில் மண் விழுந்தது
எதிர்பாராமல் ஒருநாள்
எனக்கு அந்த உண்மை தெரிந்தது
அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை!
அன்றுமுதல் எனக்கு உறக்கமில்லை
அனுதினமும் இதனால் வந்ததுதொல்லை
எவ்வளவோ சொல்லியும் புரியவில்லை
என்ன செய்யவேண்டும் தெரியவில்லை
பிரச்சினையை முடிக்க முடியாததால்
பாதிப்பின்றி முடிவெடுக்கத் தெரியாததால்
விட்டுக்கொடுக்கவும் திடமில்லாததால்
எதிர்த்துப்பேசவும் மனமில்லாததால்
எனக்கும் எண்ணை பிடிக்காமல் போனது!!
எங்களுக்கு வேறு வழியே இல்லை
இப்படியே தொடர மனமும் இல்லை
ஒன்றாய் உட்க்கார்ந்து பேசினோம்
ஒருமனதாய் முடிவு செய்தோம்
.
.
.
.
.
.
.
.
.
.
எண்ணை இல்லாமல்
தோசை சுட்டு சாப்பிட்டோம்.!!!
2 comments:
கரு உதவி-SMS நண்பர்கள்
அருமையான கவிதை! இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்; எப்படி முடியும்? என்னை, எண்ணை - தமிழில் எழுத்துப் பிழையோ என்று தோன்றியது! ஆனால் இருபொருளில் என்னை, எண்ணை உபயோகித்து 'புதிர் முடிச்சை’ இறுதியில் அவிழ்த்தீர்கள். மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
வ.க.கன்னியப்பன்
Post a Comment